Enter your Email Address to subscribe to our newsletters

தஞ்சாவூர், 1 நவம்பர் (ஹி.ச.)
உலக புகழ்பெற்ற பெரிய கோயிலை கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழனின் 1040-வது சதய விழா தஞ்சாவூரில் நேற்று (அக் 31) தொடங்கியது.
நேற்று மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் தலைமையில் 400 கலைஞர்கள் பங்கேற்ற பரத நாட்டிய புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிலையில் சதய விழாவின் முக்கிய நிகழ்வான ராஜராஜ சோழன் சிலைக்கு அரசு சார்பில் மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி இன்று (01.11.2025) காலை 7 மணியளவில் நடைபெற்றது.
இதற்காகத் தஞ்சை பெரிய கோவிலில் இருந்து ஓதுவார்கள், மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம், தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி தருமபுரம் ஆதினம் உள்ளிட்ட பலரும் பெரிய கோவிலிலிருந்து யானை மீது திருமுறை வீதி விழாவுடன் பேரணியாக வந்தனர். இதனையடுத்து ராஜராஜ சோழன் சிலைக்கு ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அதனைத் தொடர்ந்து மேலும் யானை மீது திருமுறை வீதி விழாவும் நடைபெற்றது. அதாவது பெரிய கோவிலில் தொடங்கிய திருமுறை வீதி விழா தஞ்சை நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று மீண்டும் தஞ்சை பெரிய கோவிலை வந்தடைந்தது.
அதன்பிறகு 48 ஓதுவார்கள் பெருவுடையாருக்கு 48 திவ்ய அபிஷேகங்களும் செய்ய உள்ளனர். இதனையடுத்து பெருவுடையாருக்கு அலங்காரமும், தீபாராதனையும் நடைபெற உள்ளது.
இந்நிகழ்ச்சியின் முக்கிய நிகழ்வான ராஜராஜ சோழன் விருது வழங்கும் நிகழ்வு இன்று மாலை நடைபெற உள்ளது.
Hindusthan Samachar / vidya.b