தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் மனுக்களை இணையவழியில் பெறும் வசதி - டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
சென்னை, 1 நவம்பர் (ஹி.ச.) தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் மனுக்களை இணையவழியில் பெறும் வசதி டிஎன்பிஎஸ்சியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிரு
தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் மனுக்களை இணையவழியில் பெறும் வசதி - டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு


சென்னை, 1 நவம்பர் (ஹி.ச.)

தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் மனுக்களை இணையவழியில் பெறும் வசதி டிஎன்பிஎஸ்சியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

தேர்வர்களுக்கான சேவைகளை இணையவழியில் வழங்கும் விதமாக தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் மனுக்களை இணையவழியில் பெறும் வசதி தேர்வாணையத்தால் தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தேர்வர்கள் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் மனுக்கள் மற்றும் முதல் மேல்முறையீட்டு மனுக்களை https://rtionline.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக சமர்ப்பிக்கலாம். தேர்வர்கள் இந்த இணையவழி சேவையை பயன்படுத்தி பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் தேர்வர்கள் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் மனுக்கள் மற்றும் முதல் மேல்முறையீட்டு மனுக்களை தேர்வாணையத்திற்கு கைமுறையாக தபால் மூலம் அனுப்புவதை தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / vidya.b