விற்பனைக்காக வைத்திருந்த 20 கிலோ கஞ்சா பறிமுதல் - 3 பேர் கைது
கோவை, 1 நவம்பர் (ஹி.ச.) சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.K.கார்த்திகேயன், இ.கா.ப., அவர்கள் முனைப்புடன் செயல்பட்டு வரு
The Coimbatore District Police have seized 20 kilograms of ganja in a recent operation. The police team acted on intelligence and conducted a search that led to the confiscation of the contraband.

கோவை, 1 நவம்பர் (ஹி.ச.)

சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.K.கார்த்திகேயன், இ.கா.ப., அவர்கள் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார்.

அதன் அடிப்படையில் இன்று கிணத்துக்கடவு காவல் நிலைய காவல் துறையினருக்கு கஞ்சா விற்பனைக்கு வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் முத்துகவுண்டனூர் முதல் கிணத்துக்கடவு சாலையில் வாகன சோதனை மேற்கொண்டபோது கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்த கோவை பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணி மகன் ஆனந்த் (27), மணி மகன் நரேஷ் (35) மற்றும் அருளப்பன் மகன் ஜான் (35) ஆகியோர்களை கைது செய்து அவர்களிடமிருந்து சுமார் 20 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து மேற்படி நபர்களை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.

இதுபோன்று போதைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டாலோ அல்லது சட்ட ஒழுங்கிற்கு எதிராக செயல்பட்டாலோ, ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரித்துள்ளார்.

இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவர்கள் குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க பொதுமக்கள் தயங்காமல் அழைத்திடுங்கள் கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 94981-81212 மற்றும் வாட்ஸ்அப் எண் 77081-00100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்போரின் ரகசியங்கள் காக்கப்படும். எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Hindusthan Samachar / V.srini Vasan