Enter your Email Address to subscribe to our newsletters

விழுப்புரம், 1 நவம்பர் (ஹி.ச.)
திண்டிவனத்திலிருந்து புதுச்சேரிக்கு உரிய அனுமதி பெறமால் அதிமுக பிரமுகர் கல்குவாரியிலிருந்து கிராவல் மண் கடத்திய இரு லாரிகளை கனிமளவத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகேயுள்ள கொந்தமூர் கிராமத்தில் அதிமுக பிரமுகரான சென்னை மடிப்பாக்கத்தை சார்ந்த கெளரி என்பவருக்கு சொந்தமான கல்குவாரி இயங்கி வருகிறது.
இந்த கல்குவாரியிலிருந்து உரிய அனுமதியின்றி கிராவல் மண் கடத்தப்படுவதாக விழுப்புரம் மாவட்ட கனிமவளத்துறை அதிகாரி ரமேசுக்கு ரகசிய தகவல் கிடைத்ததின் பேரில் கிளியனூர் சோதனை சாவடி அருகே கனிமவள துறை அதிகாரி ரமேஷ் சோதனை மேற்கொண்டிருந்தார்.
அப்போது அவ்வழியாக வந்த இரு லாரிகளை மடக்கி பிடித்து சோதனை செய்தபோது உரிய அனுமதியின்று கொந்தமூரிலிருந்து புதுச்சேரிக்கு கிராவல் கடத்தியது தெரியவந்தது.
இதனையடுத்து லாரியை பறிமுதல் செய்து கிளியனூர் காவல் நிலையத்தில் போலீசார் ஒப்படைத்து வழக்கு பதிவு செய்து விசாரனை செய்து வருகின்றனர்.
Hindusthan Samachar / ANANDHAN