நடிகர்கள் கண்ணா ரவி, வட்சன் சக்கரவர்த்தி இணைந்து அருணாசலேஸ்வரர் கோவிலில் தனது குடும்பத்துடன் சாமி தரிசனம்
திருவண்ணாமலை, 1 நவம்பர் (ஹி.ச.) உலகப் பிரசித்தி பெற்ற பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி அளிக்கும் திருத்தலமாக விளங்கும் திருவண்ணாமலை மாநகரில் அமைந்துள்ள அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் கோயிலிலுக்கு தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழி த
Tiruvannamalai KannaRavi


திருவண்ணாமலை, 1 நவம்பர் (ஹி.ச.)

உலகப் பிரசித்தி பெற்ற பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி அளிக்கும் திருத்தலமாக விளங்கும்

திருவண்ணாமலை மாநகரில் அமைந்துள்ள அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் கோயிலிலுக்கு தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழி திரைப்பட நடிகர், நடிகைகள், அரசியல் தலைவர்கள், தொழில் அதிபர்கள் என அனைவரும் சமீப காலமாக அண்ணாமலையாரை தரிசனம் செய்ய வருகின்றனர்.

அந்த வகையில் இன்று கூலி, கைதி, மண்டேலா‌ உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்து பிரபலமான நடிகர் கண்ணா ரவி மற்றும் வட்சன் சக்கரவர்த்தி ஆகியோர் இணைந்து தனது குடும்பத்துடன் வருகை தந்து அண்ணாமலையாரை வழிபட்டனர்.

முன்னதாக சம்பந்த விநாயகரை வணங்கிய அவர் தொடர்ந்து அண்ணாமலையார் உடனாகிய உண்ணாமலை அம்மனை வழிபட்டார், பின்னர் அம்மன் சன்னிதானம் முன்பு சிறிது நேரம் தியானத்தில் ஈடுபட்டு மனம் உருகி அண்ணாமலையாரை வழிபாடு செய்தார் நடிகர்கள் கண்ணா ரவிக்கு திருக்கோயில் சார்பாக அவர்களுக்கு மாலை மற்றும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது, கோயிலுக்கு வந்திருந்த நடிகர்களுடன் அவரது ரசிகர்கள் புகைப்படம் மற்றும் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு குடும்பத்துடன் வந்திருந்தது மிகவும் சந்தோஷமாக உள்ளது எனவும், கோவில் நன்றாக வளர்ச்சி அடைந்துள்ளது எனவும், நடிகர் ரவி மோகன் தயாரிப்பு நிறுவனத்தில் காக்கி ஸ்குவாட் என்ற புதிய படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறேன் என கூறினார்.

Hindusthan Samachar / ANANDHAN