Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 1 நவம்பர் (ஹி.ச.)
தென்னிந்தியாவின் முதல் முறையாக மணப்பெண்ணுக்கான அழகு மிளிரும் தங்க நகை கண்காட்சியை கோவையில் வேகா ஜூவல்லரி நடத்துகிறது.
காலத்தால் அழியாக கலைநயமிக்க நவீன கம்பீரமான நகை காட்சி 2025 நவம்பர் 1, மற்றும் 2 தேதிகளில், கோவை அவினாசி சாலையில் உள்ள தி ரெசிடென்சி டவர் ஹோட்டலில் நடக்கிறது.
நேர்த்தி, கைவினை, பாரம்பரிய கலைநயத்திற்கு பெயர் பெற்ற வேகா ஜூவல்லரி, கோவையில் நவம்பர் 1, 2 தேதிகளில் தென்னிந்தியாவின் முன்பு எப்போதும் நடக்காத மணப்பெண் அழகு மிளிரும் நகை கண்காட்சியை நடத்துகிறது.
வேகா ஜூவல்லரி 20 ஆண்டுகளுக்கும் மேலாக நேர்த்தியான, வளமையான தொகுப்புகளை கொண்ட நகைகளைதேர்வு செய்து காட்சிப்படுத்தியுள்ளது. தங்கம், வைரம், போல்கி மற்றும் சிஸ் நகைகளை கொண்டுள்ளது. தலைமுறைகள் கடந்த புரவலர்களின் இதயங்களை வென்றுள்ளது.
குறிப்பிடத்தக்க இந்த நிகழ்வில், வேகா கலை நயமிக்க, பாரம்பரிய நகைகளை கோவையின் மணப்பெண்களின் மனம் கவர காட்சிப்படுத்துகிறது. ஒரே கூரையின் கீழ் இத்தகைய நுண்கலை மணப்பெண் நகைகளை காண்பது அரிதான வாய்ப்பு. தவற விடாதீர்கள்.
உத்வேகம் அளிக்கும் நேர்த்தியான பாரம்பரிய நிகழ்வு - இந்த மாபெரும் நகை கண்காட்சி, காலாச்சாரத்தையும் கைவினை திறனையும் பிரதிபலிப்பதாக மட்டும் அல்ல, பாரம்பரியத்தை சந்திக்கும் புதிய கண்டுபிடிப்புகளாக இருக்கும். இதை எதிரொலிப்பது தான் வேகாவின் வடிவைமப்பு தத்துவம்.
இங்கு இடம் பெறும் ஒவ்வொரு நகையும், பாரம்பரியத்தின் கதை சொல்லும். காலத்தால் வெல்ல முடியாத அழகையும், அன்பையும் வெளிப்படுத்தும். மரபு வழியோடு சொகுசை விரும்பும் புதுப் பெண்களுக்கென பிரத்யோகமாக வடிவமைக்கப்பட்டவை இவை.
வேகாவின் மணப்பெண் நகைகளில் விருந்தினர்களும் தன்னிலை மறப்பார்கள். நுண்ணிய போல்கி தொகுப்புகள், மணப்பெண் வைர நகைகள், குந்தன் கலை திறன்கள், கோயில் தங்க நகைகள், குறைந்த அளவிலான பாரம்பரிய படைப்புகள் கண்காட்சிக்கென வடிவமைக்கப்பட்டுள்ளன.
துவக்க விழா நிகழ்விற்கு கவுரவ விருந்தினராக கோவை எமரால்டு குழுமத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் கே. சீனிவாசன் பங்கேற்றார்.
இவர் இந்தியாவின் மாபெரும் மதிப்புமிக்க தங்க நகை உற்பத்தியாளர் ஆவார். இவரது பங்கேற்பு, நிகழ்ச்சியின் முக்கிய மைல்கலாக அமையும்.
ஹிந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியின் நிர்வாக அரங்காவலர் திருமதி. டி. ஆர். கே.. சரஸ்வதி பங்கேற்றார்.
கல்வியில் தொலைநோக்கு பார்வை கொண்ட கல்வித்தலைவி ஆவார்.
திருப்பூரில் சிறந்த தொழில் முனைவோராகவும், ஜவுளி மற்றும் வடிவமைப்பில் சிறந்தவராகவும் திகழும் டேப்ஸ் நிறுவனத்தின் பிரதிநிதி திருமதி. ஜெ. வி. சாலினி பங்கேற்றார்.
வேகாவின் சிறப்புமிக்க மணப்பெண் தொகுப்புகளை வெளிப்படுத்த இவர்களது வருகை, தென்னிந்திய மணப்பெண் பாரம்பரியத்துக்கு பெருமை சேர்ப்பதாக இருக்கும்.
Hindusthan Samachar / V.srini Vasan