Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 1 நவம்பர் (ஹி.ச.)
கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்து பிரிந்து தமிழகத்துடன் இணைக்க மார்ஷல் ஏ.நேசமணி பெரும் பாடுபட்டார்.
அவரது அயராத உழைப்பின் காரணமாக கன்னியாகுமரி மாவட்டம் 1956 ஆம் ஆண்டு நவம்பர் 1-ம் தேதி தமிழகத்துடன் இணைக்கப்பட்டது.
இதனை காரணமாக மார்ஷல் ஏ.நேசமணி “குமரியின் தந்தை” என்று அழைக்கப்படுகிறார். தமிழ்நாட்டுடன் கன்னியாகுமரி மாவட்டம் இணைந்த நாளான நவம்பர் 1-ந் தேதி அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது
இதனை முன்னிட்டு தமிழக முதல்வர் இன்று (நவ 01) எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது,
இன்று நாம் வாழும் தமிழ்நாட்டின் பல பகுதிகளை நமக்காகப் போராடிப் பெற்றுத் தந்த குமரித் தந்தை மார்ஷல் நேசமணி, சிலம்புச் செல்வர் ம.பொ.சி., முதலிய எண்ணற்ற போராளிகளுக்கு எல்லைப் போராட்டத் தியாகிகள் நாளில் என் வீரவணக்கத்தைச் செலுத்துகிறேன்.
போராடாவிட்டால் நமக்குச் சொந்தமான நிலம் மட்டுமல்ல, வாக்குரிமையே கூட பறிபோய்விடும் என அப்போதே காட்டிச் சென்றுள்ள நம் தலைவர்கள் வழியில் தமிழ்நாட்டின் உரிமைகளைக் காப்போம்!
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / vidya.b