Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 1 நவம்பர் (ஹி.ச.)
அத்திப்பழத்தில் உள்ள ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நம் இதய நோய்க்கு அரணாக, சரும பிரச்சனைகளை தீர்க்க, சிறுநீரக கற்கள் நீங்க இப்படி ஏராளமான நன்மைகளை தருகிறது.
இந்த ஒரே ஒரு அத்திப்பழத்தை கொண்டு இன்னும் எவ்வளவு நன்மைகள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
கண்ணீர்த்துளி போன்ற வடிவிலான அத்திப்பழங்கள், மென்மையான, மெல்லும் சுவை கொண்ட, ஏராளமான சிறிய விதைகளால் நிரப்பப்பட்ட, இளஞ்சிவப்பு நிற சதை கொண்ட ஒரு தனித்துவமான பழமாகும். அவை உண்ணக்கூடிய தோலுடன் வருகின்றன, இது பச்சை அல்லது ஊதா நிறத்தில் இருக்கலாம்.
மேலும், அத்தி இலைகள் சத்தானவை மற்றும் சுகாதார நன்மைகளால் நிரம்பியுள்ளன. அவை ஒருவரின் செரிமானத்தை மேம்படுத்தலாம், இரத்த சர்க்கரை அளவை நிர்வகிக்க உதவும் மற்றும் இதய நோய் அபாயத்தைக் குறைக்கலாம்.
அத்தி பழங்களை சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இது பல சிக்கல்களைக் குறைக்கிறது.
வைட்டமின் பி, வைட்டமின் ஈ, வைட்டமின் சி, ஐரன், பொட்டாஷியம், மெக்னீஷியம், நார்ச்சத்து போன்ற சத்துக்கள் உள்ளன.
தினசரி உணவில் சேர்ப்பது நல்லது. இது செரிமான சக்திக்கு மிகவும் உதவும்.
நல்ல தோல் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தினமும் ஒரு அத்தி சாப்பிடுவதால் முகம் பிரகாசமாக மாறும்.
தினமும் இரவு படுக்கும் முன் இரண்டு அத்தி பணத்தை காலில் சேர்த்து குடித்தால் மலட்டுத்தன்மை நீங்கும்.
அத்திப்பழத்தில் உள்ள வைட்டமின்கள் மற்றும் ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் நீரேற்றத்தை ஊக்குவிப்பதன் மூலமும் வயதான அறிகுறிகளை குறைப்பதன் மூலமும் ஒட்டுமொத்த சருமத்தின் தரத்தை மேம்படுத்துவதன் மூலமும் ஆரோக்கியமான சருமத்திற்கு பங்களிக்கிறது.
குறிப்பாக உலர்ந்த அத்திப்பழங்கள் மிகுந்த நன்மை பயக்கும். குடல் பாக்டீரியாக்களின் ஒழிக்கின்றன.
இதனால் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பிரீபயாட்டிக்குகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது.
அத்திப்பழத்தில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. இது உடலில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவுகிறது. ரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எனவே, அதை உணவில் ஒரு அங்கமாக வைத்துக் கொள்ளுங்கள்.
அத்திப்பழத்தை உட்கொள்வது கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இதய நோய் அபாயத்தைக் குறைக்கிறது. இதில் பொட்டாசியம் நிறைந்துள்ளது. ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும் உதவகிறது.
Hindusthan Samachar / Dr. Vara Prasada Rao PV