Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 1 நவம்பர் (ஹி.ச.)
உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த மூத்த இந்தி இலக்கியவாதியான பத்மஸ்ரீ ராம்தராஷ் மிஸ்ரா, 101 வயதில் நேற்று (அக் 31) காலமானாதாக அவரது மகள் ஸ்மிதா மிஸ்ரா அறிவித்தார்.
பல மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்த மிஸ்ரா, டெல்லியின் துவாரகாவில் உள்ள அவரது மகன் ஷஷாங்கின் வீட்டில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். திடீரென உடல்நிலை மோசமடைந்து ராம்தராஷ் மிஸ்ரா நேற்று மாலை உயிரிழந்துள்ளார். அவரது இறுதிச் சடங்குகள் மங்களபுரி தகனக் கூடத்தில் இன்று (நவ 01) நடைபெற்றன.
இந்நிலையில் மிஸ்ராவின் மறைவிற்கு இன்று(நவ 01) பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி தனது இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது,
புகழ்பெற்ற இலக்கியவாதியும் கல்வியாளருமான ராம்தர்ஷ் மிஷ்ராவின் மறைவு எனக்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. அவரது மறைவு இந்தி மற்றும் போஜ்புரி இலக்கியத்திற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும்.
அவரது பிரபலமான படைப்புகளுக்காக அவர் எப்போதும் நினைவுகூரப்படுவார். இந்த துயர நேரத்தில் அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஓம் சாந்தி!
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Hindusthan Samachar / vidya.b