Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 10 நவம்பர் (ஹி.ச.)
மதுரை தோப்பூர் அருகே உள்ள கோ. புதுப்பட்டியில் ரூபாய் 70 கோடி மதிப்பீட்டில் அரசு ஓமியோபதி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழா - மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்நிகழ்வில் பதிவுத்துறை அமைச்சர் பி மூர்த்தி பேசியதாவது,
ஓமியோபதி மருத்துவமனை 50 ஆண்டு நிறைவடைந்து பொன்விழா கொண்டாப்பட்டு வரும் சூழ்நிலையில் இங்கு அமையக்கூடிய மருத்துவமனை எல்லோருக்கும் பயனுள்ளதாக அமையும்.
மக்களை தேடி மருத்துவம், நலம் காக்கும் ஸ்டாலின் திட்டங்கள் குக்கிராமங்களில் இருக்கக்கூடிய மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது.
70 கோடி மதிப்பீட்டில் அமையவுள்ள இக்கல்லூரி மதுரைக்கு பெருமையை தேடித்தருகிறது.
என அமைச்சர் மூர்த்தி கூறினார்
இதனைத் தொடர்ந்து தேசிய அமைச்சர் மா சுப்ரமணியன்,
மதுரைக்கு இன்று மிக முக்கியமான நாள்.
அடிக்கல் நாட்டு விழாவாக தொடங்கப்பட்டாலும் 18 மாதங்கள் கழித்து மருத்துவமனை கட்டிடம், மருத்துவ கல்லூரி கட்டிடம், படுக்கை வசதியுடன் கட்டிடம் என ஏராளமான கட்டிடங்கள் மிக பிரமாண்டமாக அமையும்.
கட்டிடம் நிறைவு பெற்ற பிறகு அனைவருக்குமான போக்குவரத்து வசதி செய்து கொடுக்கப்படும்.
75 -ம் ஆண்டு தமிழகத்தில் ஓமியோபதி கல்லூரியை கொண்டு வந்தவர் அப்போதைய முதல்வர் கருணாநிதி தான்
82 ல் மதுரைக்கு மாற்றம் செய்யப்பட்ட நிலையில் திருமங்கலத்தில் கட்டப்பட்ட கட்டிடம் நீர் பிடிப்பு பகுதியில் கட்டப்பட்டுள்ளதால் தொடர்ந்து பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.
அதனால் இங்கு இடம் தேர்வு செய்யப்பட்செய்யப்பட்டது.
இப்போது சாதாரண இடமாக தெரிந்தாலும் அருகில் எய்ம்ஸ் மருத்துவமனை இருப்பதால் மிகப்பெரிய கவனத்தை இந்த மருத்துவமனை பெரும்.
சித்த மருத்துவத்தின் முக்கியத்துவத்தை தமிழகம் உணர்ந்திருக்கிறது.
ஆயுஸ்ஸ் என்று சொல்லக்கூடிய அனைத்து மருத்துவக் கல்லூரிகள் தமிழகத்தில் மட்டும் அமைந்துள்ளது.
சித்தா, யோகா, யுனானி, ஓமியோபதி என அனைத்து கல்லூரிகள் அமைந்துள்ளது தமிழகத்தில் மட்டும்தான்
ஓமியோபதி, சித்த மருத்துவத்தின் மூலம் கோவிட் காலகட்டத்தில் 50000 பேர் காப்பாற்றபட்டுள்னர்.
சென்னையில் மாதவரத்தில் விரைவில் சித்த மருத்துவ பல்கலைகழகம் அமைய உள்ளது.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தற்போது 9000 பேர்வரை தினமும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
மதுரை ராஜாஜி மருத்துவமனையில் பல 419.50 கோடிருபாய் மதிப்பீட்டில் சிகிச்சை மையங்கள் திமுக ஆட்சியில் கட்டி கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு மருத்துவ பயனாளர்கள் பயன்பெற்று வருகின்றனர்.
எய்ம்ஸ் மருத்துவமனை அமைய முதல்வர் கோரிக்கையை ஏற்று ஜப்பான் ஜெய்கா நிறுவனத்திடம் பேசி அதற்கான நிதி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தியதன் பேரில் ஜெய்கா நிறுவனம் கட்டிட பணிகளை தொடங்கியுள்ளது.
முதல்வரின் முயற்சியால் மதுரையில் எய்ம்ஸ் அமைய உள்ளது.
18 மாத காலத்தில் இந்த கட்டிடம் நிறைவு பெற்று விடும். அதற்கான பணிகளை ஒப்பந்ததாரர் மேற்கொள்ள வேண்டும் என அமைச்சர் மா சுப்பிரமணியன் கூறினார் .
Hindusthan Samachar / Durai.J