Enter your Email Address to subscribe to our newsletters

திருப்பதி, 10 நவம்பர் (ஹி.ச)
உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு உலககெங்கிலிருந்தும் பக்தர்கள் வருகை தருகின்றனர். இக்கோவிலை திருப்பதி தேவஸ்தானம் நிர்வகித்து வருகின்றது.
ஏழுமலைகளின் அடிவாரத்தில் அமைந்துள்ள அலிபிரி பகுதியில், தேவஸ்தானத்தின் கீழ் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் 2 ஊழியர்கள் அசைவ உணவு சாப்பிட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக திருமலை காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது.
இந்த புகார் குறித்து தேவஸ்தான நிர்வாகத்திற்கு போலீசார் தகவல் தெரிவித்த நிலையில், தேவஸ்தான ஊழியர்கள் அசைவ உணவு சாப்பிட்டதாக YSRகாங்கிரஸ் கட்சியினர் வீடியோ வெளியிட்டனர். இதனை தொடர்ந்து அலிபிரி அருகே அசைவ உணவு உட்கொண்டதற்காக ராமசாமி மற்றும் சரசம்மா ஆகிய 2 ஒப்பந்த ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.
திருமலையில் அசைவம் தடை செய்யப்பட்டுள்ள நிலையில் தேவஸ்தானம் நடவடிக்கை மேற்கொண்டது.
மேலும், அவர்கள் இருவர் மீது ஆந்திர பிரதேச அறநிலைய சட்டம் பிரிவு 114-ன் கீழ் வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Hindusthan Samachar / vidya.b