Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 10 நவம்பர் (ஹி.ச.)
கோவை, விமான நிலையத்தில் அ.தி.முக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர் சந்திப்பு,
ஒரு வாரத்துக்கு முன்பு கோவை விமான நிலையம் பின் புறம் ஆண் நண்பருடன் பேசிக் கொண்டு இருந்த போது ஆண் நண்பரை தாக்கி விட்டு போதை ஆசாமிகள் அவரை தூக்கி கொண்டு பாலியல் வன்கொடுமை நடந்து உள்ளது.
மிகப்பெரிய அதிர்ச்சியை அளிக்கிறது.
பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை.
காவல் துறையினர் கண்டு அச்சமில்லாமல் குற்றம் புரிபவர்கள் நடந்து கொள்கின்றனர்.
திண்டிவனம் பகுதியில் மாணவியை காவலர் பாலியல் வன்கொடுமை செய்து உள்ளார்.
மக்களுக்கு பாதுகாப்பு அளிப்பதற்கு பதில் இந்த சம்பவம் நடந்து உள்ளது.
காவல்துறை ஒன்று தமிழகத்தில் இருக்கிறதா பாதுகாப்பு அளிக்கிறதா என்ற நிலைதான் இருக்கிறது.
சமூக நலத்துறை அமைச்சர் பாலியல் வன்கொடுமை 6995 சிறுமிகள் பாதிக்கபப்ட்டுள்ளதாகவும் அதற்கு 104 கோடி நிவாரணம் வழங்கபட்டதாக ஒப்புக்கொண்டுள்ளார்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு அடியோடு இல்லாத நிலை இருக்கிறது.
போதைபொருள் அதிகரித்துள்ளது போதை ஆசாமிகளால் இந்த சம்பவங்கள் நடக்கின்றன.
நிரந்த ர டிஜிபி இன்னும் நியமிக்கப்படவில்லை வேண்டப்பட்டவர் வர வேண்டும் என்பதற்காக நிரந்தர டிஜிபி நியமிக்கவில்லை,
டி.ஜி.பி நியமனத்தில் இந்த அரசு முறையாக விதிகளை பன்பற்றவில்லை.
யு பி எஸ் சி 3 பேரை தேர்ந்தெடுத்து அனுப்பியும் டி.ஜி.பி நியமனம் செய்யபப்டவில்லை.
உச்ச நீதிமன்றத்தில் தனிநபர் வழக்கு தொடரபப்ட்டு மூன்று வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டு உள்ளது.
ஏன் இந்த பாரபட்சம் பார்க்கின்றனர்.
Sir திட்டம் கொண்டு வ்ரபப்ட்டு சீர்திருத்தம் செய்யப்பட்டு வருகிறது.
வாக்காளர்கள் பட்டியலில் இறந்தவர்கள் , இடமாற்றம் ஆனவர்கள் பெயர்கள் தொடர்கிறது.
Sir என்றாலே பதறுகிறார்கள் ஏன் பதறுகிறார்கள்.
இதில் காலதாமதம் ஏற்பட வாய்ப்பில்லை.
ஒரு மாதம் என்பது போதுமான காலம்.
இறந்தவர்கள் நீக்கபப்டக் கூடாது என்பது தி.மு.க வின் நோக்கம்.
தேர்தலின் போது திருட்டு ஓட்டு போட வசதியாக .
அது தடுக்கப்படும் என்பதால் அதுதான் இவர்களுக்கு பயம்.
வாக்குகள் பறிபோகும் என அச்ச உணர்வை மக்கள் மத்தியில் ஏறப்டுத்த முயல்கின்றனர் திட்டமிட்டே மகக்ளை குழப்புகின்றனர் இதனை ஏற்றுக்கொள்ள முடியாது.
ஈரோட்டில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு இடிக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகியும் அவர்களது பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளது.
ஏன் பதறுகிறார்கள் ஏன் அலறுகிறார்கள்.
Blo தான் படிவங்களை கொடுக்க வேண்டும் வாங்க வேண்டும் ஆளும் கட்சியினர் தலையிடுவதால் உண்மையான வாக்காளர் பட்டியல் உருவாக்க முடியாது.
அதிமுகவில் குடும்ப ஆட்சி என யாராவது சொல்லியுள்ளார்களா ?
செங்கோட்டையன் வேண்டுமென்றே குற்றம் சாட்டுகிறார்.
நிதியே ஒதுக்காமல் தி.மு.க திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகின்றனர். என்றார்.
Hindusthan Samachar / V.srini Vasan