துள்ளுவதோ இளமை திரைப்பட நடிகர் அபினய் உயிழப்பு!
சென்னை, 10 நவம்பர் (ஹி.ச.) கஸ்தூரி ராஜா இயக்கிய 2002 ஆம் ஆண்டு வெளியான துள்ளுவதோ இளமை திரைப்படத்தின் மூலமாக நடிகர் அபினய் நடிகராக அறிமுகமானார். தாஸ், என்றென்றும் புன்னகை, வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார் 2000 -க
Abinai


சென்னை, 10 நவம்பர் (ஹி.ச.)

கஸ்தூரி ராஜா இயக்கிய 2002 ஆம் ஆண்டு வெளியான துள்ளுவதோ இளமை திரைப்படத்தின் மூலமாக நடிகர் அபினய் நடிகராக அறிமுகமானார்.

தாஸ், என்றென்றும் புன்னகை, வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்

2000 -களின் பிற்பகுதியில், இவர் துணை வேடங்களில் நடிக்கத் துவங்கினார். குறிப்பாக சொல்ல சொல்ல இனிக்கும் (2009), பாலைவனச் சோலை (2009) உள்ளிட்ட படங்களில் குறிப்பிடத்தக்க கதாபாத்திரங்களில் நடித்தார்.

இவர் துப்பக்கி மற்றும் அஞ்சான் ஆகிய திரைப்படங்களுக்கு வித்யூத் ஜம்வால்வுக்கு பின்னணி குரல் வழங்கியுள்ளார்.

இந்நிலையில் நடிகர் அபிநய், லிவர் சிரோசிஸ் (Liver Cirrhosis) என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டு,நோயின் பாதிப்பால் வயிறு வீங்கி காணப்பட்டிருந்தார். சென்னை ரங்கராஜபுரத்தில் உள்ள இல்லத்தில் உயிரிழந்துள்ளார்.

இறுதி மரியாதை செலுத்துவதற்கு கூட உறவினர்கள் யாருமில்லை என்று சொன்ன தகவலில் பேரில் சக நடிகர்கள் மற்றும் நண்பர்கள் தான் இறுதி மரியாதை செலுத்த உள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Hindusthan Samachar / P YUVARAJ