128 ஆண்டுகளுக்கு பிறகு 2028 ஒலிம்பிக்கில் 6 கிரிக்கெட் அணிகள் - ஐ.சி.சி. அறிவிப்பு!
துபாய், 10 நவம்பர் (ஹி.ச.) 34-வது ஒலிம்பிக் போட்டி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 2028-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் நடக்கிறது. இந்த ஒலிம்பிக்கில் டி20 கிரிக்கெட்டும் இடம் பெற்றுள்ளது. 128 ஆண்டுக்கு பிறகு ஒலிம்பிக்கில் கிரிக்கெட் இடம்பெறுவதால் அதிக
128 ஆண்டுகளுக்கு பிறகு 2028 ஒலிம்பிக்கில் 6 கிரிக்கெட் அணிகள் - ஐ.சி.சி. அறிவிப்பு


துபாய், 10 நவம்பர் (ஹி.ச.)

34-வது ஒலிம்பிக் போட்டி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 2028-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் நடக்கிறது.

இந்த ஒலிம்பிக்கில் டி20 கிரிக்கெட்டும் இடம் பெற்றுள்ளது. 128 ஆண்டுக்கு பிறகு ஒலிம்பிக்கில் கிரிக்கெட் இடம்பெறுவதால் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த போட்டிகள் அனைத்தும் டி20 வடிவில் (20 ஓவர்) நடத்தப்பட உள்ளது.

இதையொட்டி லாஸ்ஏஞ்சல்சில் இருந்து 50 கிலோமீட்டர் தூரத்தில் பேர்கிரவுண்ட்ஸ் என்ற இடத்தில் தற்காலிமாக கிரிக்கெட் ஸ்டேடியம் அமைக்கப்படுகிறது.

இந்நிலையில் இந்த ஒலிம்பிக்சில் நடைபெற உள்ள கிரிக்கெட்டில் 6 அணிகள் பங்கேற்கும் என்று ஐ.சி.சி. அறிவித்துள்ளது.

ஆசியா கண்டத்தில் இந்திய அணியும்

ஐரோப்பா கண்டத்தில் இங்கிலாந்து அணியும்

ஆப்ரிக்கா கண்டத்தில் தென் ஆப்ரிக்கா அணியும்

ஓஸியானியா கண்டத்தில் ஆஸ்திரேலியா அணியும் தகுதி பெறுகின்றன.

5வது இடத்தில் போட்டியை நடத்தும் நாடு என்ற முறையில் அமெரிக்க கண்டத்தில் இருந்து அமெரிக்கா தகுதி பெற வாய்ப்பு உள்ளது. அதிலும் வெஸ்ட் இண்டீஸ் அணி போட்டியில் உள்ளது.

ஆறாவது அணியை தேர்வு செய்வது குறித்து குவாலிபயர் முறையில் தேர்வு செய்வது என முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதற்கான போட்டியில் பாகிஸ்தான், நியூசிலாந்து, இலங்கை மற்றும் வங்கதேசம் ஆகிய அணிகள் போட்டியில் உள்ளன.

இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Hindusthan Samachar / JANAKI RAM