தூத்துக்குடியில் நவ 12-ம் தேதி சட்டமன்ற பொது கணக்குக்குழு 2024-26-ம் ஆண்டுக்கான ஆய்வு - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
தூத்துக்குடி, 10 நவம்பர் (ஹி.ச.) தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டமன்ற பொது கணக்குக்குழு குழு தலைவர் செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ. (ஸ்ரீபெரும்புதூர்) தலைமையில் 2024-26-ம் ஆண்டுக்கான ஆய்வை நாளை வருகிற 12ம் தேதி (புதன்கிழமை) மேற்கொள்கிறது. இதில்,
தூத்துக்குடியில் நவ 12ம் தேதி  சட்டமன்ற பொது கணக்குக்குழு 2024-26-ம் ஆண்டுக்கான ஆய்வு  - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு


தூத்துக்குடி, 10 நவம்பர் (ஹி.ச.)

தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டமன்ற பொது கணக்குக்குழு குழு தலைவர் செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ. (ஸ்ரீபெரும்புதூர்) தலைமையில் 2024-26-ம் ஆண்டுக்கான ஆய்வை நாளை வருகிற 12ம் தேதி (புதன்கிழமை) மேற்கொள்கிறது.

இதில், சுற்றுசூழல் மற்றும் காலநிலை மாற்றம் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு (திருச்சுழி), எஸ். காந்திராஜன் (வேடசந்தூர்), ஏ.பி. நந்தகுமார் (அணைக்கட்டு) மற்றும் குழு உறுப்பினர்கள் அக்ரி.எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி (போளூர்), அப்துல் சமது (மணப்பாறை), ராமசந்திரன் (தளி), எழிலரசன் (காஞ்சிபுரம்), அய்யப்பன் (கடலூர்), சந்திரன் (திருத்தணி), சரஸ்வதி (மொடக்குறிச்சி), சிவக்குமார் என்ற தாயகம் கவி (திரு.வி.க.நகர்), செந்தில்குமார் (பழனி), ஆர்.டி.சேகர் (பெரம்பூர்), எஸ்.சேகர் (பரமத்திவேலூர்), நத்தம் விசுவநாதன் (நத்தம்), பழனியாண்டி (ஸ்ரீரங்கம்), முகமது ஷாநவாஸ் (நாகப்பட்டினம்), ஜெயராம் (சிங்காநல்லூர்) ஆகியோர் அடங்கிய குழுவினர் ஆய்வு மேற்கொள்கின்றனர்.

இந்த குழு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து ஆய்வுப் பயணம் மேற்கொள்கின்றனர். பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்துத் துறை அலுவலர்கள் உடனான ஆய்வுக் கூட்டம் நடக்கிறது.

எனவே பொதுமக்கள் சட்டமன்ற பொது கணக்கு குழுவினரிடம் கோரிக்கை மனுக்களை அளிக்கலாம் என்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தெரிவித்து உள்ளார்.

Hindusthan Samachar / vidya.b