Enter your Email Address to subscribe to our newsletters

மயிலாடுதுறை, 10 நவம்பர் (ஹி.ச.)
மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் அருகே வானகிரி மீனவர் கிராமத்தைச் சேர்ந்த ராமயன் என்பவருக்கு சொந்தமான படகில் கடந்த எட்டாம் தேதி 14 மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க சென்றனர்.
அவர்கள் நேற்று இரவு கோடியக்கரைக்கு தென்கிழக்கு கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த பொழுது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை கைது செய்து இலங்கைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
படகிலிருந்த மீனவர்களில் ராஜேந்திரன், சிவதாஸ், குழந்தைவேல், ரஞ்சித், ராஜ், கலை, குகன், பிரசாத், அகிலன், ஆகாஷ், ராபின், ராஜ்குமார் ஆகிய 12 பேர் வானகிரியை சேர்ந்தவர்கள், பாரதி என்ற ஒரு மீனவர் கடலூரை சேர்ந்தவர், மற்றொரு மீனவர் கோவிந்த் தரங்கம்பாடியை சேர்ந்தவர்.
இது குறித்து மின்வளத்துறை அதிகாரிகளிடம் கேட்ட பொழுது,
மீனவர்கள் கைது செய்யப்பட்ட தகவல் தங்களுக்கு கிடைத்ததாகவும், அடுத்த கட்ட சட்டபூர்வமான நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும், தெரிவித்துள்ளனர்.
மீனவர்களை மீட்டு படகுகளை மீண்டும் பெற்று தர வேண்டும் என்று மீனவ கிராமத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Hindusthan Samachar / ANANDHAN