இரு ஐ ஏ.எஸ். அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தொடர மத்திய அரசின் அனுமதி கேட்க, 19 மாதங்கள் எடுத்துக் கொண்டது ஏன்? -சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி
சென்னை, 10 நவம்பர் (ஹி.ச.) முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில் இரு ஐ ஏ.எஸ். அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தொடர மத்திய அரசின் அனுமதி கேட்க, 19 மாதங்கள் எடுத்துக் கொண்டது ஏன்? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது.
High


சென்னை, 10 நவம்பர் (ஹி.ச.)

முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில் இரு ஐ ஏ.எஸ். அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தொடர மத்திய அரசின் அனுமதி கேட்க, 19 மாதங்கள் எடுத்துக் கொண்டது ஏன்? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது.

இந்த வழக்கில் நவம்பர் 24-ம் தேதி விளக்க அறிக்கை தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்புத் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் வேலுமணி மற்றும் நான்கு அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தொடர கடந்த 2024 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அனுமதி பெற்றுள்ள நிலையில், இரு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தொடர அனுமதி கேட்க 19 மாதங்கள் எடுத்துக் கொண்டது ஏன் என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது?

ஊழல் இல்லாத அரசு அமைய வேண்டும் என்பது பொதுமக்கள் விருப்பமாக உள்ளது. அதனால் ஊழல் வழக்குகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

வேலுமணிக்கு எதிரான வழக்கில் உயர்நீதிமன்றம் விதித்த காலக்கெடுவுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை என அறப்போர் இயக்கம் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு குறித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Hindusthan Samachar / P YUVARAJ