Enter your Email Address to subscribe to our newsletters

புதுக்கோட்டை, 10 நவம்பர் (ஹி.ச.)
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே களமாவூரில் இன்று (நவ. 10) நடைபெற்ற அரசு விழாவில் முதல்வர் ஸ்டாலின் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது:
வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தத்திற்கு எதிராக, திமுக கூட்டணி மனுவில் அவர் (பழனிசாமி) ஏன் இணைந்துள்ளார். அவருக்கு வேறு வேலை ஏதும் இல்லை. அதனால் விமர்சனம் வைக்கிறார். அதை பற்றி நான் கவலைப்படவில்லை.
எங்கள் வேலையை நாங்கள் பார்த்து கொண்டு இருக்கிறோம். எஸ்ஐஆர் குறித்து நீதிமன்றத்திற்கு போய் இருக்கிறோம். நாளைக்கு ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம். அதற்கு பிறகு பாருங்கள்.
குற்றச்சாட்டுகள் கூறும் எதிர்க்கட்சிகளுக்கு வேற, வேலை கிடையாது. அதை தான் அவர்கள் செய்து ஆக வேண்டும். எத்தனை முனை போட்டி வந்தாலும், திமுக தலைமையில் இருக்கிற கூட்டணி தான் மாபெரும் வெற்றி பெறும்.
7 வது முறையாக நிச்சயமாக திமுக ஆட்சி அமைக்கும். எதிர்க்கட்சிகளை பலமாகவும் பார்க்கவில்லை, பலவீனமாகவும் பார்க்கவில்லை. நாங்கள் எங்கள் வேலையை பார்க்கிறோம்.
இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
Hindusthan Samachar / vidya.b