Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 10 நவம்பர் (ஹி.ச.)
நேபாளத்தில் கடந்த 4 தேதி முதல் 8 தேதி வரை, ரங்கசாலா ஸ்டேடியத்தில், சர்வதேச அளவிலான இன்டோ நேபாள் SGADF 2025 விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது.
இதில் தடகளம், கபடி, கிரிக்கெட், சிலம்பம், யோகா, கராத்தே, கைப்பந்து, கூடைப்பந்து, உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளை உள்ளடக்கிய போட்டிகள் நடைபெற்றன. சுமார் 1000 க்கும் மேற்பட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர் வீராங்கனைகள் இந்த போட்டியில் கலந்து கொண்டனர்.
இந்திய சார்பாக கோவை, வடவள்ளி பகுதியை சேர்ந்த வருண் தற்காப்பு கலைக்கூடத்தை சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகள் 7 பேர் சிலம்பம் சுற்றும் போட்டியில் கலந்து கொண்டு 10 தங்க பதக்கங்கள், 4 கோப்பைகளை வென்று, முதல் இடத்தை பிடித்தனர்.
நேபாள நாட்டிலிருந்து கோவை திரும்பிய வீரர்களை கோவை விமான நிலையத்தில் அவர்களது பெற்றோர்களும், ஆசிரியர்களும், பொதுமக்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதில் வெற்றி பெற்ற வீரர் வீராங்கனைகளுக்கு சால்வைகள் மாலைகள் அணிவித்து மற்றும் இனிப்புகளை வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த வருண்,
தற்காப்பு கலைக்கூட ஆசிரியர் வருண், நேபாளம் நாட்டில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா சார்பாக நாங்கள் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளோம், போட்டி மிகவும் கடுமையாக இருந்தது, இருப்பினும் நாங்கள் அதை எதிர்கொண்டு இந்தியாவுக்கு வெற்றி பெற்று தர வேண்டும் என்ற எண்ணத்துடன் மிகவும் கடமையாகவில்லை என்று தற்போது பத்துக்கும் மேற்பட்ட தங்க பதக்கங்களை நாங்கள் வென்றோம், மேலும் இந்தியாவுக்காக நாங்கள் பல்வேறு நாடுகளுக்கு சென்று வெற்றி பெற்று தங்கப்பதக்கங்களை வென்று தருவோம்.
மற்ற மாநிலங்கள், வெளிநாடுகளில் சிலம்பத்திற்கு முக்கியத்துவம் தரப்படுகிறது.
ஆனால் தமிழகத்தில் அவ்வாறு இல்லை, எனவே இந்திய அரசு, தமிழ்நாடு அரசும் சிலம்பத்திற்கு என தனித்துறையை உருவாக்க வேண்டும். மேலும் நாங்கள் இன்னும் பல போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெறுவோம்.
அதற்கு தமிழக அரசின் உதவியை எதிர்கொண்டு இருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Hindusthan Samachar / V.srini Vasan