Enter your Email Address to subscribe to our newsletters


கோவை, 10 நவம்பர் (ஹி.ச.)
கோவைபுதூரை சேர்ந்த சூரியநாராயணன் மற்றும் அவரது மகன் ஆகாஷ் ஆகியோர் கோவையில் தங்களது பணிகளை முடித்துக்கொண்டு, இரவு கோவை புட்டுவிக்கி சாலை வழியாக வீடு திரும்பிக்கொண்டு இருந்தனர்.
அப்போது பின்னால் வந்த தனியார் கால்டாக்ஸி வாகனம் எதிர்பாராத விதமாக முன்னாள் சென்று கொண்டு இருந்த இருசக்கர வாகனத்தில் மோதியதில், சம்பவ இடத்திலேயே சூரியநாராயணன் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் உடன் பயணித்த அவரது மகனுக்கு பலத்த காயமடைந்து எலும்பு முறிவு ஏற்பட்டது.
விபத்து சம்பவம் அறிந்த முன்னாள் அமைச்சரும் அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணி விபத்து நடந்த இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைக்கு செல்ல உதவிசெய்தார்.
மேலும் சம்பவ இடத்தில் இருந்த காவல்துறையினரிடம் விபத்து குறித்து கேட்டறிந்தார்.
Hindusthan Samachar / V.srini Vasan