Enter your Email Address to subscribe to our newsletters

திருநெல்வேலி, 10 நவம்பர் (ஹி.ச.)
2026-ல் ஹஜ் புனித பயணம் மேற்கொள்ளவிருக்கும் தமிழ்நாட்டை சேர்ந்த ஹஜ் பயணிகளுக்காக சேவையாற்ற மாநில ஹஜ் ஆய்வாளர்களை தற்காலிகமாக சவூதி அரேபியா அனுப்ப, (Online) விண்ணப்பங்கள் செய்யலாம். தற்காலிக பணிக்காலம் 13.4.2026 முதல் 5.7.2026 வரை சுமார் இரண்டு மாத காலமாகும்.
மத்திய, மாநில அரசு ஊழியர்கள், துணை ராணுவப் படைகளில் பணியாற்றும் தகுதி வாய்ந்த அலுவலர்கள் மற்றும் தன்னாட்சி அமைப்புகள் அல்லது மத்திய மாநில அரசின் கீழ் இயங்கும் பொது நிறுவனங்களில் பணியாற்றும் நிரந்தர பணியாளர்கள் விண்ணப்பிக்க தகுதி வாய்ந்தவர்கள் ஆவர்.
மாநில ஹஜ் ஆய்வாளர்கள் சவூதி அரேபியாவில் பணிபுரியும் காலம் பணிக்காலமாக கருதப்படும்.
இந்த பணிக்காக Online விண்ணப்பிக்கும் முறை, தகுதி, நியமன முறை ஆகியவற்றை மும்பை இந்திய ஹஜ் குழுவின் இணைய முகவரியில் (www.hajcommittee.gov.in) அறிந்து கொள்ளலாம் என திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் சுகுமார் அறிவித்துள்ளார்.
Hindusthan Samachar / vidya.b