கரூர் கூட்ட நெரிசல் வழக்கு விவகாரம் - மின்சாரத் துறை அதிகாரிகளிடம் சிபிஐ விசாரணை
கரூர், 10 நவம்பர் (ஹி.ச.) கரூரில் தவெக விஜய் பரப்புரையின் போது 41 பேர் உயிரிழந்த வழக்கை சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில், தவெக வழக்கறிஞர் அரசு, மற்றும் பனையூர் கட்சி அலுவலகத்தின் உதவியாளர் குரு, நிர்வாகி ஒருவர் என மொத்தம் ம
Karur Stampede


கரூர், 10 நவம்பர் (ஹி.ச.)

கரூரில் தவெக விஜய் பரப்புரையின் போது 41 பேர் உயிரிழந்த வழக்கை சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதில்,

தவெக வழக்கறிஞர் அரசு, மற்றும் பனையூர் கட்சி அலுவலகத்தின் உதவியாளர் குரு, நிர்வாகி ஒருவர் என மொத்தம் மூன்று நபர்கள் சிபிஐ விசாரணைக்கு கடந்த இரண்டு நாட்களாக ஆஜராகினர்.

இந்த நிலையில் மத்திய பொதுத்துறை நிறுவனத்திலிருந்து அதிகாரிகள் சிபிஐ விசாரணைக்கு ஆஜராகினர்.

சுமார் இரண்டு மணி நேர விசாரணைக்கு பின்னர் வெளியே சென்ற அதிகாரிகள் பத்து நிமிடம் கழித்து மீண்டும் விசாரணைக்கு ஆஜராகினர்.

மூன்று அதிகாரிகள் ஆவணங்களுடன் உள்ளே சென்ற நிலையில் இரண்டு அதிகாரிகள் மீண்டும் வெளியில் சென்றுள்ளனர்.

மின்சாரத் துறையைச் சார்ந்த ஒரு அதிகாரியிடம் மட்டும் தற்போது சிபிஐ விசாரணை நடைபெற்று வருகிறது.

Hindusthan Samachar / ANANDHAN