Enter your Email Address to subscribe to our newsletters

தூத்துக்குடி, 10 நவம்பர் (ஹி.ச.)
கடந்த 27.10.2025-தேதி சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை பெஞ்சின் உத்தரவின்படி தூத்துக்குடி - நாசரேத் திருமண்டல நிர்வாகியாக நீதிபதி ஜோதிமணி பொறுப்பேற்று தேர்தல்களை கடந்த 03.09.2025 அன்று விட்ட இடத்திலிருந்து தொடர வேண்டும் என்று உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.
இதைக்கருத்தில் கொண்டு, புதிய தேர்தல் அட்டவணையின்படி, முதல் கட்டத் தேர்தலான திருமண்டல பெருமன்ற பிரதிநிதிகள் மற்றும் சேகரமன்ற பிரதிநிதிகளுக்கான தேர்தல் நேற்று (09.11.2025) காலை 10.00 மணிக்கு தொடங்கி மாலை 5.00 மணி வரை அனைத்து ஆலயங்களிலும் நடைபெற்றது.
நாசரேத் தூய யோவான் பேராலயத்தில் நடைபெற்ற தேர்தலில் திருமண்டல பெருமன்றத்திற்கு (டி.சி.) தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய நபர் 6 பேர்களில் எஸ்.டி.கே. அணி சார்பில் போட்டியிட்ட பொது பிரிவில் ஆண்ட்ரூஸ் ராக்லண்ட், ராஜசிங் சாலமோன், மாமல்லன், செல்வின் ஆகியோரும், பெண்கள் பிரிவில் ஸ்டெல்லா சாலமோனும் 35 வயதுக்குட்பட்ட பிரிவில் ஆண்ட்ரூஸ் ஐசக் ஆகியோரும் ஒட்டு மொத்தமாக வெற்றி பெற்றனர்.
சபை பிரதிநிதிகளுக்கான தேர்தல் (பி.சி.) பொதுப் பிரிவில் எஸ்.டி.கே. அணி சார்பில் போட்டியிட்ட பர்னபாஸ் ஜெயக்குமார், பெல்ட்டன் ஆபிரகாம், சந்திரன், டேவின் சாலமோன், கெர்சோம் கிறிஸ்டியன், ஜாஸ்பர், ஜெபக்குமார் சாமுவேல், கேபா செல்வன், லேவி அசோக் சுந்தரராஜ், மாணிக்கராஜ் வில்சன், நிர்மல்சிங் பொன்குமார், புஷ்பராஜ், தனசிங், ராஜேந்திரன், ஆகியோரும் டி.எஸ்.எப். அணி சார்பில் ரஞ்சன், செல்வின் ஆகியோர் வெற்றி பெற்றனர்.
பெண்கள் பிரிவில் போட்டியிட்ட ஏஞ்சலின் ராஜேஷ், ஜோஸ்பெல் கெனல்வி, லில்லி ஜெயக்குமார் ஆகியோரும் 35 வயதுக்குட்பட்ட இளையோர் பிரிவில் ஜெபின் ஜேம்ஸ் கிருபஸ், ஜெஃபி ஐசக், லிவிங்ஸ்டன் பிரதீப் ஆகியோரும் எஸ்.டி.கே. அணி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர்.
இதனால் நாசரேத் தூய யோவான் பேராலயத்தில் நடைபெற்ற திருமண்டல முதற்கட்ட தேர்தலில் எஸ்.டி.கே. ராஜன் அணி சார்பில் போட்டியிட்ட 25 பேர்கள் பெரும் பான்மையாக வெற்றி பெற்றுள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b