Enter your Email Address to subscribe to our newsletters

ஹரியானா, 10 நவம்பர் (ஹி.ச.)
ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத் மாவட்டத்தில்
பயங்கரவாதி முசம்மில் இமாமின் வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது தகவலையடுத்து சந்தேகத்தின் பேரில்
காவல்துறை சோதனையில் இமாமின் வீட்டில் சோதனையிட்டனர்.
அந்த சோதனையில் 50 பைகள் வெடிபொருட்கள் கண்டு பிடிக்கப்பட்டது.
கண்டுபிடிக்கப்பட்ட அந்த வெடி பொருட்களை போலீசார் பிக் அப் வாகனத்தில் ஏற்றி காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர்.
ஆனால் இந்தப் பைகளில் என்ன வெடிபொருட்கள் இருந்தன? அது எவ்வளவு ஆபத்தானது?
போன்ற தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.
உள்ளூர்வாசிகளின் அறிக்கையின் படி,
இந்த இமாமின் வீட்டிற்கு முசம்மிலின் சந்தேகத்திற்கிடமான வருகைகள் பல மாதங்களாக நடந்து வருகின்றன.
வீட்டில் சந்தேகத்திற்கிடமான செயல்கள் நடப்பதாக சிலர் கூறி வருகின்றனர், மேலும் ஏற்கனவே காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளனர்.
வெடிபொருட்களின் தன்மை, அவை எங்கிருந்து வந்தன, யார் கொண்டு வந்தன என்பது குறித்து பேச போலீசார் மறுத்துவிட்டனர்.
இவ்வாறு உள்ளுவாசிகள் தெரிவித்தனர்.
இச்சம்பவத்தால் இமாமின் வீட்டைச் சுற்றி ஏராளமான போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.
Hindusthan Samachar / Durai.J