Enter your Email Address to subscribe to our newsletters

அசாம், 10 நவம்பர் (ஹி.ச.)
அசாம் மாநிலம் உதல்குரியில்
அனைத்து சந்தால் மாணவர் சங்கம் (ASSU) சார்பாக போராட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்தில் 10,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் கலந்து கொண்டனர்.
மோன்பூர் மைதானத்தில் இருந்து தொடங்கிய இந்தப் பேரணி, பாரம்பரிய சந்தால் நடனங்கள், டிரம் பீட்கள் மற்றும் முழக்கங்களுடன் பேரணி நடைபெற்றது.
சமீபத்தில் நாடு முழுவதும் சந்தால் சமூகத்தினர் மேற் கொண்ட மிகப்பெரிய இயக்கம் இதுவாகும்.
ஆர்ப்பாட்டம் பேரணியில் முன்வைத்த கோரிக்கைகள்:
இந்திய அரசியலமைப்பின் பிரிவு 342 இன் கீழ் சந்தால் சமூகத்தை பட்டியல் பழங்குடி (எஸ்.டி) பட்டியலில் சேர்க்க வேண்டும்.
சாந்தல் குடும்பங்களுக்கு அஸ்ஸாம் விவசாய நிலச் சட்டம், 1886 இன் பிரிவு 10 இன் கீழ் நில உரிமைகள் வழங்கப்பட வேண்டும்.
சாந்தல் சமூகத்திற்கு இன அடையாளச் சான்றிதழ்கள் வழங்கப்பட வேண்டும்
2022 முத்தரப்பு ஆதிவாசி அமைதி ஒப்பந்தம் செயல்படுத்தப்பட வேண்டும்.
மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு அரசுப் பள்ளியிலும் சந்தாலி மொழி ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும்.
ஆகிய கோரிக்கைகளை முன்னிறுத்தியும்,
'நாங்கள் ஆதிவாசிகள்' எங்களை இப்போதே அங்கீகரிக்க வேண்டும்,
தாமதமான நீதி மறுக்கப்படுகிறது, போன்ற வாசகங்கள் கொண்ட பதாகைகளை ஏந்திச் சென்றனர்.
Hindusthan Samachar / Durai.J