Enter your Email Address to subscribe to our newsletters

புதுக்கோட்டை, 10 நவம்பர் (ஹி.ச.)
தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டமாக சென்று அரசின் திட்டப்பணிகளை கள ஆய்வு மேற்கொண்டு வரும் முதல்வர் ஸ்டாலின் புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று (நவ 10) கள ஆய்வு மேற் கொண்டார்.
கீரனூர் அருகே களமாவூரில் முகாம்பிகை என்ஜினீயரிங் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற அரசு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்தார்.
பின்னர் ரூ. 767 கோடி மதிப்பிலான திட்டங்கள் வழங்கும் விழாவில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று பேசினார்.
அப்போது அவர் புதுக்கோட்டைக்கு அறிவித்த 6 புதிய அறிவிப்புகள் பின்வருமாறு:
1. அறந்தாங்கி வீரகொண்டான் ஏரி உள்ளிட்ட முக்கிய ஏரிகள் ரூ.15 கோடி செலவில் புனரமைக்கப்படும்.
2. கீரமங்கலம் பகுதி விவசாயிகள் நலன்கருதி காய்கறி குளிர்பதன கிடங்குகள் அமைக்கப்படும்
3. வடகாடு ஊராட்சியில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் உயர்மட்ட பாலங்கள் அமைக்கப்படும்.
4. புதுக்கோட்டை இளைஞர்களுக்கு ஐடி துறையில் வேலை வாய்ப்பு அளிக்க நியோ டைடில் பார்க் அமைக்கப்படும்.
5. கந்தர்வக்கோட்டை ஊராட்சி பேரூராட்சியாக தரம் உயர்த்தப்படும்
6. பொன்னமராவதி பேரூராட்சி நகராட்சியாக தரம் உயர்த்தப்படும்.
என 6 புதிய அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்.
Hindusthan Samachar / vidya.b