பாம்பை விரட்ட வைத்த தீ - பழைய இரும்பு கடையில் தீ பரவி சேதம்!
விருதுநகர், 10 நவம்பர் (ஹி.ச.) விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே படந்தாலையை சேர்ந்தவர் சங்கர் (42). இவருக்கு சொந்தமான பழைய இரும்பு கடை உள்ளது. பழைய இரும்பு வாங்கி விற்பனை செய்யும் கடை தென்றல் நகரில் உள்ளது. கடைக்கு அருகே உள்ள வீட்டின் பின் பக
Fire Accident


விருதுநகர், 10 நவம்பர் (ஹி.ச.)

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே படந்தாலையை சேர்ந்தவர் சங்கர் (42). இவருக்கு சொந்தமான பழைய இரும்பு கடை உள்ளது. பழைய இரும்பு வாங்கி விற்பனை செய்யும் கடை தென்றல் நகரில் உள்ளது.

கடைக்கு அருகே உள்ள வீட்டின் பின் பகுதியில் பாம்பு வந்து அங்கு இருந்த பொந்தின் உள்ளே சென்றுள்ளது. பாம்பை விரட்ட பொந்து மீது பழைய துணிகளை வைத்து தீ வைத்து எரித்து உள்ளனர். அப்போது தீ, அருகில் இருக்கும் பழைய இரும்பு கடைக்கு பரவியது.

இதில் பழைய இரும்பு கடையில் உள்ளே சேமித்து வைத்திருந்த பிளாஸ்டிக் மற்றும் வயர்கள் முழுவதும் எரிந்து நாசமாகியது. இந்த விபத்து தொடர்பாக தகவல் அறிந்த சாத்தூர் மற்றும் சிவகாசி தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் 10 க்கும் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த விபத்தில் சுமார் 2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகி உள்ளது.

இந்த விபத்து தொடர்பாக் சாத்தூர் நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து‌ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Hindusthan Samachar / ANANDHAN