வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்துக்கு எதிராக செல்வப்பெருந்தகை, வைகோ சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல்
புதுடெல்லி, 10 நவம்பர் (ஹி.ச.) தமிழக சட்டமன்றத்தேர்தல் அடுத்த ஆண்டு (2026) நடைபெறவுள்ள நிலையில் அதற்கான வேலைகளில் தேர்தல் கமிஷன் இறங்கியுள்ளது. இதனையடுத்து வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணி (எஸ்.ஐ. ஆர்.) மாநிலம் முழுவதும் தீவிரமாக நடந்து வருக
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்துக்கு எதிராக செல்வப்பெருந்தகை, வைகோ சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல்


புதுடெல்லி, 10 நவம்பர் (ஹி.ச.)

தமிழக சட்டமன்றத்தேர்தல் அடுத்த ஆண்டு (2026) நடைபெறவுள்ள நிலையில் அதற்கான வேலைகளில் தேர்தல் கமிஷன் இறங்கியுள்ளது.

இதனையடுத்து வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணி (எஸ்.ஐ. ஆர்.) மாநிலம் முழுவதும் தீவிரமாக நடந்து வருகிறது.

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணியை மேற்கொள்வதற்கு ஆரம்பம் முதலே தி.மு.க. கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இது தொடர்பாக திமுக தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எதிர்ப்புகள் இருந்தபோதிலும் தேர்தல் கமிஷன் சிறப்பு திருத்த பணியை தொடங்கியது.

இந்த நிலையில், வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்துக்கு எதிராக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆகியோர் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று கூறப்படுகிறது.

மேலும் திமுக தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நாளை விசாரணைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / JANAKI RAM