Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 10 நவம்பர் (ஹி.ச.)
நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளார்.
அவர் இயக்கம் முதல் திரைப்படத்தில் தெலுங்கு நடிகர் சந்தீப் கிஷன் நாயகனாக நடிக்கிறார்.
இந்தப் படத்திற்கான வேலைகள் இறுதி கட்டத்தில் உள்ள நிலையில், படத்தின் தலைப்பை அறிவித்துள்ளனர்.
ஜேசன் சஞ்சய் இயக்கும் முதல் படத்திற்கு சிக்மா என்ற தலைப்பை வைத்துள்ளனர்.
இந்தப் படத்திற்கான அறிவிப்பு வெளியாகி ஒரு ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இதுவரை தலைப்பை அறிவிக்காமல் இருந்த நிலையில் தற்போது தலைப்பை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
ஜேசன் சஞ்சய் - சந்தீப் கிஷன் ஆகியோர் கூட்டணியில் உருவாகும் படத்திற்கு தமன் இசை அமைக்கிறார்.
தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் அந்தத் திரைப்படம் உருவாகிறது.
Hindusthan Samachar / P YUVARAJ