காவலர் எழுத்துத் தேர்வில் முறைகேடு - இளம்பெண் உட்பட 3 பேர் கைது
தென்காசி, 10 நவம்பர் (ஹி.ச.) இரண்டாம் நிலை காவலர்கள் தேர்வுக்கான எழுத்துத் தேர்வு நேற்றைய தினம் தமிழக முழுவதும் நடைபெற்ற நிலையில், இந்த தேர்வின் போது தென்காசி மாவட்டம், இலஞ்சி பகுதியில் உள்ள ஒரு தேர்வு மையத்தில் தேர்வு எழுதிய சிவகிரி பகுதியை சேர்ந
Police Exam


தென்காசி, 10 நவம்பர் (ஹி.ச.)

இரண்டாம் நிலை காவலர்கள் தேர்வுக்கான எழுத்துத் தேர்வு நேற்றைய தினம் தமிழக முழுவதும் நடைபெற்ற நிலையில், இந்த தேர்வின் போது தென்காசி மாவட்டம், இலஞ்சி பகுதியில் உள்ள ஒரு தேர்வு மையத்தில் தேர்வு எழுதிய சிவகிரி பகுதியை சேர்ந்த கோபிகிருஷ்ணன்

(வயது 23) என்ற வாலிபர் தனது உள்ளாடைக்குள் செல்போனை மறைத்து வைத்து தேர்வு எழுதும் அறைக்கு எடுத்து சென்ற நிலையில், அவர் அவ்வப்போது கழிவறைக்கு சென்றதால் போலீசாரிடம் சிக்கினார்.

இந்த நிலையில், அவரைப் பிடித்து போலீசார் விசாரணை நடத்திய போது, அவர் மறைத்து வைத்திருந்த செல்போனில் வினாத்தாள்களை புகைப்படம் எடுத்து 3 நபர்களுக்கு அனுப்பியதும், அவர்கள் அதற்கான விடையை அனுப்பியதும் தெரிய வந்தது.

இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக ஆழ்வார்குறிச்சி காவல் நிலைய ஆய்வாளர் சண்முகநயினார் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில், குற்றாலம் போலீசார் 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து இந்த வழக்கில் தொடர்புடைய கோபிகிருஷ்ணன் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த சிவகிரி பகுதியை சேர்ந்த பாண்டியராஜன், மல்லிகா ஆகிய மூன்று பேரையும் கைது செய்த நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய நாமக்கல் பகுதியை சேர்ந்த பிரதீப் என்ற வாலிபரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Hindusthan Samachar / ANANDHAN