Enter your Email Address to subscribe to our newsletters

தென்காசி, 10 நவம்பர் (ஹி.ச.)
தென்காசி மாவட்டம், கடையநல்லூர் பகுதியை சேர்ந்த இசக்கிராஜா மற்றும் தளபதி சுரேஷ் என்ற இரண்டு நபர்கள் மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள மாலி நாட்டிற்கு வேலைக்கு சென்ற நிலையில், அவர்களை பயங்கரவாத கும்பல் கடத்தியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், அவர்களை இந்திய அரசும், தமிழக அரசும் மீட்டு தர நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், இரண்டு நாடுகளும் தாமதமாக செயல்பட்டு வருவதால் தற்போது கடத்தப்பட்டவர்கள் உயிருடன் இருக்கிறார்களா? இல்லையா? என்று கூட தெரியாத நிலை நீடிக்கிறது.
இந்த நிலையில் தாங்கள் பெரும் மன உளைச்சலில் இருப்பதாகவும், அவர்களை மீட்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இன்றைய தினம் கடத்தப்பட்ட இசக்கிராஜா என்பவரின் மனைவி பிரவீனா மற்றும் தளபதி சுரேஷ் என்பவரது தந்தை முருகேசன் ஆகிய இருவரும் தென்காசி மாவட்ட வருவாய் அலுவலரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / ANANDHAN