Enter your Email Address to subscribe to our newsletters


கோவை, 10 நவம்பர் (ஹி.ச.)
சி.ஐ.டி.யு 16 வது மாநில மாநாடு மிகப்பெரிய பேரணி நிறைவு பெற்று உள்ளது.
இந் நிகழ்வில் பேசிய .ஐ.டி.யு மாநில துணைத் தலைவர் சௌந்தரராஜன்,
இந்த மாநாட்டில் 53 தீர்மானங்கள் நிறைவேற்றி உள்ளதாகவும், சர்வதேச அளவிலே, தேசிய, மாநில அளவில் பிரச்சனைகள் குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றியதாகவும், அதில் குறிப்பாக தொழிலாளர்கள் ஒப்பந்த தொழிலாளர்கள், தற்காலிக தொழிலாளர்கள் ஏராளமானோர் பணி அமர்த்தப்படுகிறார்கள், பணி நிரந்தரம் இல்லை என்றும், பணி பாதுகாப்பு இல்லை, முறைசாரா தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் இல்லை, இப்படி ஏராளமான தொழிலாளர்கள் வஞ்சிக்கப்படுவதற்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றி உள்ளதாகவும் கூறியவர், அங்கன்வாடி பணியாளர்கள், திட்டப் பணிகளில் மக்களைத் தேடி மருத்துவம் போன்ற பணிகளில் ஈடுபடும் பெண்களுக்கு 5000 ரூபாய் சம்பளம் என்ற அளவில் மிக குறைவான சம்பளத்தை கொடுத்து அரசை ஏமாற்றுவதை கண்டித்து தீர்மானம், அவர்களுக்கு பணியில் நிரந்தர வேண்டும், அரசு ஊழியராக ஆக்க வேண்டும், அதைப் பற்றி மூன்று தீர்மானங்கள் எனவும், இதில் அரசாங்கத்தின் கொள்கை தொடர்பாக பெரும் கூட்டம் வருகிறது என்றால், 20 லட்சம் கட்ட வேண்டும், 10 லட்சம் கட்ட வேண்டும் என்றெல்லாம் அவர்கள் போடுகின்ற சட்டங்கள் ஜனநாயகத்திற்கு விரோதமானது என்றும், தமிழக அரசு அதை எப்படி ? செய்கிறது என்பது புரியவில்லை என்றும், மக்கள் திரளுவதும், அவர்களுக்கு சொல்லுகின்ற ஜனநாயக மகத்துவத்தை கட்டுப்படுத்துவதாகவும், அதில் சிறிய, சிறிய இயக்கங்கள் எனவும், அதில் அந்த வாய்ப்பு இல்லாததால் அவர்கள் கருத்துக்களை சொல்ல முடியாது நிலை ஏற்படும் எனவே அதை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றியதாக தெரிவித்தார்.
பெண்களுக்கு நிறைய பிரச்சனைகள் உள்ளது. ஓசூரில் நடந்த பிரச்சனையை பார்ப்பதாகவும், 20 அபாயகரமான தொழில் கெமிக்கல், அலுமினியம் போன்ற அபாயகரமான தொழிலில் பெண்களை ஈடுபடுத்தக் கூடாது என்றும், 75 வருடமாக தடை உள்ளதாகவும் அந்த தடையை அகற்றி பெண்களை பயன்படுத்தலாம் என்று ஒரு திட்டத்தை மாநில அரசு கொண்டு வந்து உள்ளது. 8 மணி நேர வேலையை பல இடங்களில் 12 மணி நேரமாக்கப்பட்டு உள்ளதாகவும், 18 இடங்களில் நடந்ததாகவும் அதை தமிழகத்தில் செய்ய முற்பட்ட போது தடுத்து விட்டதாக தெரிவித்தார்.
அப்படி இருக்கின்ற சட்டங்களை தொழிலாளர்களுக்கு எதிராக திருத்துவதாகவும், அது மிக, மிக மோசமானது என்றும், மோடி நான்கு தொகுப்பு சட்டங்கள் என்று மோட்டார் வாகன சட்டங்களை திருத்தம் என்கின்ற பெயரில் மிகப்பெரிய தாக்குதலை தொழிலாளர்கள் மீது எதிராக தொடுத்துக் கொண்டு உள்ளதாகவும், அதையெல்லாம் குறித்து தீர்மானம் நிறைவேற்றி உள்ளதாகவும் கூறினார்.
19 ல் இருந்து 25 வரை மாநிலம் முழுவதும் எல்லா மாவட்டங்களிலும், தீவிரமான இதை ஒட்டிய பிரச்சாரங்கள் நடைபெறும் என்றவர், பிறகு 29 ஆம் தேதி இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தார்.
இப்படிப்பட்ட நடவடிக்கைகளுக்கு தமிழக மக்களும் தொழிலாளர்களும் ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
மத்தியிலும், மாநிலத்திலும் எந்த கட்சி வந்தாலும் அரசுத் துறைகளில் வெளி ஆட்கள் கொண்டு வருவதாக போராடி வருகிறீர்கள் தீர்வு காலதாமதம் ஏற்படுகிறது என்ற கேள்விக்கு?
தீர்வு என்பது இன்னும் போராட்டம் தீவிர படுத்த வேண்டும், அரசை இதை செயல்பட விடமாட்டோம் என்று தடுக்கின்ற போராட்டத்தை நடத்த வேண்டும் அதற்கு வலிமையை நோக்கி தான் முயற்சிப்பதாகவும் மத்திய அரசு, மாநில அரசு காண்ட்ராக்ட் அவுட்சொரிசிங் முறையில் அந்தப் பொருளாதாரக் கொள்கை விஷயத்தில் எந்த வித்தியாசம் கிடையாது என்று குற்றம் சாட்டினார்.
தி.மு.க விற்கும் பி.ஜே.பி க்கும் எந்த வித்தியாசமும் கிடையாது. என்பது தான் எங்களது நிலை, ஆகவே அதை எதிர்த்து போராடுவது தான் சமரசம் இல்லாமல் போராடுவதாக தெரிவித்தார்.
42 ஆண்டுகளில் தலைவர், செயலாளர், துணைத் தலைவர் உதவித் தலைவர் என்ற பொறுப்புக்கு வந்து உள்ளது குறித்தான கேள்விக்கு?
பழையன கழிதலும், புதியன புகுதலும் அவசியம், நான் அவர்களுடன் இருந்து எல்லாம் செய்யப் போவதாகவும், புதிதாக நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளதாகவும், தனக்கும் வயதாகிறது அடுத்தவர்களுக்கு வழி விட வேண்டும் என்றும், இருக்கிற போது என்ன பயிற்சி தர வேண்டும் அப்பொழுது தான் தொடர்ச்சி இருக்கும் என்றார்.
புதிதாக கட்சியில் பொறுப்பேற்ற பின் தி.மு.க வை கடுமையாக விமர்சிப்பது குறித்தான கேள்விக்கு?
அதுதான் உண்மை தொழிலாளர் தொடர்பாக அரசினுடைய போக்கு நடைமுறையில் தப்பு அதுதான் எங்களுடைய நிலை அதன் அடிப்படையில் பேசுவதாக கூறினார்.
Hindusthan Samachar / V.srini Vasan