Enter your Email Address to subscribe to our newsletters


கோவை, 10 நவம்பர் (ஹி.ச.)
கவுதம் வாசுதேவனுடன் உதவி இயக்குனராக பணியாற்றிய இயக்குனர் சாரன் தியாகு இயக்கி உள்ள ஆரோமலே திரைப்படம்.
இத்திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
படத்தின் இயக்குனர் சாரன் தியாகு, கதாநாயகன் கிஷன் தாஸ், கதாநாயகி நம்ரிதா , மற்றும் ஹர்ஷத் கான் ஆகியோர் கோவையில் பிராட்வே திரையரங்கில் ரசிகர்களுடன் படம் பார்த்து, ரசிகர்களுடன் செல்பி எடுத்து படம் குறித்து பேசி மகிழ்ந்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பட குழுவினர் கூறியது,
அனைத்துப் பகுதிகளிலும் படத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
குறிப்பாக கோவை மக்களுடன் இணைந்து படம் பார்க்கும்போது அவர்களுடைய வரவேற்பு எங்களை திக்கு முக்காடு செய்கிறது என்றும இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் அவரிடம் உதவி இயக்குனராக பணி புரிந்ததால் தனக்கு கடந்த ஐந்து வருடமாக காதல் படம் எடுக்க வேண்டும் என்ற ஆசை இருந்ததாகவும் அது தற்போது நிறைவாக உள்ளது.
தான் எடுக்கும் படம் இயக்குனருக்கு லாபகரமாக அமைய வேண்டும், பார்க்கின்ற மக்கள் எந்த இடத்திலும் சோர்வடையாமல் திருப்தியாக பார்க்க வேண்டும், மேலும் படத்தில் கதாநாயகன், கதாநாயகி அனைவரும் அருமையாக நடித்துள்ளனர்.
அவர்களுக்கு தனது நன்றி. தனது அப்பா நடிகர் தியாகு ஆதரவு தனக்கு இருப்பதால் திரையுலகத்தில் பல நண்பர்கள் சப்போர்ட் செய்துள்ளார்கள், இத்தனை படத்தில் வெற்றிக்கு இசை மிக முக்கிய பங்காற்றி உள்ளார். என்றார்.
நடிகர் விஜயின் அரசியல் பயணம் குறித்து கேட்கும் போது,
சிறு வயது முதலே நாங்கள் நடிகர் விஜயின் தீவிர ரசிகர்கள், அவர் படம் பார்த்து, டான்ஸ், டயலாக் பார்த்து தான் நாங்கள் வளர்ந்துள்ளோம்.
அரசியலை பற்றி சொல்வதற்கு எங்களுக்கு பெரிதாக அரசியல் அனுபவம் இல்லை.
புதிதாக அவர் ஆரம்பித்திருக்கும் பயணத்திற்கு எப்பொழுதும் எங்கள் ஆதரவு இருக்கும் என தெரிவித்தார்.
Hindusthan Samachar / V.srini Vasan