மாணவிகளுக்கு பாலியல் தொல்லை - கைது செய்ய வலியுறுத்தி காவல் நிலையம் முற்றுகை
மதுரை, 10 நவம்பர் (ஹி.ச.) மதுரையில் அரசு உதவி பெறும் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியர் உள்ளிட்ட மூன்று பேர் மீது மதுரை மாநகர் திலகர் திடல் அனைத்து மகளிர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந
Thilagar Thidal Station


மதுரை, 10 நவம்பர் (ஹி.ச.)

மதுரையில் அரசு உதவி பெறும் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியர் உள்ளிட்ட மூன்று பேர் மீது மதுரை மாநகர் திலகர் திடல் அனைத்து மகளிர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த ஆசிரியரை கைது செய்ய வேண்டும் என கோரி அனைத்திந்திய மாதர் சங்கம் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர், மதுரை கிரைம் பிரான்ச் பகுதியில் உள்ள திலகர் திடல் மகளிர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Hindusthan Samachar / ANANDHAN