திருச்சி காவலர் குடியிருப்பு படுகொலை சம்பவத்தில் ஒருவர் கைது!
திருச்சி, 10 நவம்பர் (ஹி.ச.) திருச்சி, பீமா நகர் பகுதியைச் சேர்ந்தவர் தாமரைச்செல்வன் (வயது 25). இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், திருச்சி தபால் நிலைய சாலையில் சென்று கொண்டிருந்த தாமரைச்செல்வன் பைக் மீது 2 ப
Trichy Murder Case


திருச்சி, 10 நவம்பர் (ஹி.ச.)

திருச்சி, பீமா நகர் பகுதியைச் சேர்ந்தவர் தாமரைச்செல்வன்

(வயது 25). இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், திருச்சி தபால் நிலைய சாலையில் சென்று கொண்டிருந்த தாமரைச்செல்வன் பைக் மீது 2 பைக்குகளை மோதி கீழே தள்ளி வெட்டிக் கொலை செய்ய முயற்சிக்கப்பட்டுள்ளது.

அந்த இளைஞர் உயிர் தப்பிக்க முயன்று, அருகே உள்ள புதிய காவலர் குடியிருப்பின் உள்ளே நுழைந்துள்ளார்.

ஆனாலும், அவரை விடாமல் விரட்டிச் சென்ற ஐந்து பேர் கொண்ட கும்பல், காவலர் குடியிருப்பு வளாகத்துக்குள்ளேயே அவர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தி, அவரை வெட்டிப் படுகொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடியிருக்கிறது.

இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதியினர் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.

இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் இளமாறன் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

திருச்சியில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் உள்ள நிலையில் திருச்சி மாநகரில் பள்ளிகள் அதிகம் உள்ள பகுதியில் குறிப்பாக காவலர் குடியிருப்பு உள்ளேயே புகுந்து ஒருவரை வெட்டி படுகொலை செய்த சம்பவத்தால் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / ANANDHAN