Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 10 நவம்பர் (ஹி.ச.
சென்னை அடையாறில் உள்ள அம்மா மக்கள் முன்னேற்ற கழக தலைமை அலுவலகத்தில் புதுச்சேரி நிர்வாகிகளுடன் 2026 சட்டமன்ற தேர்தல் குறித்து கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆலோசனை மேற்கொண்டார் .
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது,
2026 சட்டமன்ற தேர்தல் குறித்து புதுச்சேரி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடைபெற உள்ளது.
செங்கோட்டையனுடன் எனக்கு முரண்பாடெல்லாம் இல்லை. ஓரணியில் அதிமுக தொண்டர்கள் திரள வேண்டும் என்பதே அவர் நோக்கம்.
தம்பி ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்டோர் விரக்தியின் உச்சத்தில் உள்ளனர். சிரஞ்சீவி , பவன் கல்யாண் உள்ளிட்டோரை பற்றி சொல்லி விஜயை ஏமாற்றி கூட்டணிக்கு வர வழைக்க பார்த்தனர். ஆனால் விஜய் தெளிவாக முடியாது என்று சொல்லி விட்டார்.
நான் உண்மையை பேசுகிறேன் , உண்மை கசக்கத்தான் செய்யும். ஆனால் துரோகம் எப்போதும் அதன் வேலையை காட்டி விடும் .
அண்ணன் பழனிசாமி ஆட்சியையும் சேர்த்து 31 ஆண்டுகள் ஆட்சி செய்த கட்சி அதிமுக. அதிமுக தற்போது மிகவும் பலவீனமாக உள்ளது
கொடநாட்டில் நகை பணம் இருக்காது என தெரிந்தும் அங்கு கொலைகள் நடந்துள்ளன. பழனிசாமி ஆட்சியில் பல தடயங்கள் அங்கு அழிக்கப்பட்டுள்ளன. வாங்க..வாங்க என கடையில் நின்று கூவி அழைப்பதைப் போல் கூட்டணிக்கு கட்சிகளை அழைக்கின்றனர்.
கட்சி நிர்வாகிகள் தொடர்புடைய குற்றச்சாட்டு குறித்த தரவுகளைதான் நாங்கள் அழித்தோம் . அரசு தரவுகளை , ஆதாரங்களை நான் அழிக்கவில்லை.
ஜெ. காலத்தில் நிர்வாகிகள் குறித்த குற்றச்சாட்டு பச்சை கவரில் வரும் . அவ்வப்போது அவற்றை ஜெ. பார்வையிடுவார்.
அது அரசுத் தரப்பு ஆதாரங்கள் அல்ல... தனிப்பட்ட முறையில் கட்சி நிர்வாகிகள் குறித்து ஜெ. வுக்கு வந்தவை
ஜெ. மறைவுக்கு பின் தேவையில்லாததை அழித்து விடுமாறு சித்தி (சசிகலா) கூறினார்.
நான் அரசு ஆதாரத்தை அழித்ததாக குற்றம் சாட்டுவோர் முடிந்தால் என் மீது வழக்கு தொடரட்டும்.
தான் மனநலம் குன்றி இருப்பது தெரியாமல் மற்றவர்களை மன நிலை பாதித்ததாக தம்பி உதயகுமார் பேசுகிறார் . தம்பி உதயகுமாருக்காக நான் இரக்கப்படுகிறேன்.
கொடநாட்டில் ஜன்னலை உடைத்து, காவலாளியை கொன்று ஏதோ ஆவணங்களை தேடினர், ஆனால் அந்த முட்டாள்களுக்கு தெரியாது, அவை எல்லாம் போயஸ் கார்டனில் இருந்தன என்றுதான் நான் கூறினேன்.
இது நான் பொதுக்கூட்டத்தில் பேசியதில்லை , நீங்களாக செய்தியாளர்கள் கேட்டதால் சொன்ன பதில்,
ஜெ. மறைவுக்கு பின் ஒருசிலரின் சுயநலத்தால் சிலர் பாஜக அதிமுகவின் கட்சி நடவடிக்கையில் தலையிட்டதாக விமர்சனங்கள் எழுந்தன .
வீட்டில் உள்ளவர்கள் இடம் தராமல் வெளி ஆட்கள் எப்படி உள்ளே புகுந்திருக்க முடியும்.. எல்லாவற்றுக்கும் சில நபர்களின் சுய நலம்தான் காரணம்.
ஜெ. இருந்தவரை வெளி நபர்கள் பாஜக அதிமுக விற்குள் எந்த தலையீடும் செய்யவில்லை
பன்னீர் செல்வம் தர்ம யுத்தத்தின் பின் விளைவுகளை உணர்ந்து இப்போது பேசி வருகிறார். தர்மயுத்தம் தொடங்காமல் ஓ.பன்னீர் செல்வம் ஒரு வாரம் காத்திருந்தல் அவர் கூட மீண்டும் முதலமைச்சர் ஆகி இருக்க கூடும்.
அண்ணாமலை தான் பலமுறை என்னை மீண்டும் கூட்டணிக்கு வர வலியுறுத்தினார் .
டெல்லியில் உள்ள பாஜக தலைவர்கள் யாரும் கூட்டணிக்கு மீண்டும் வர வேண்டும் என என்னிடம் பேசவில்லை.
பழனிசாமியை முதலமைச்சர் வேட்பாளராக கூறி வருவதால் மீண்டும் பாஜக கூட்டணிக்கு செல்லும் எண்ணமே இல்லை எனக்கு.
சந்திப்புகள் எல்லாம் மகாபாரதம் மாதிரி தொடர்ந்து கொண்டே இருக்க முடியாது. நான் பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் அடுத்தடுத்த பணிகள் குறித்து பேசி வருகிறோம் .
அமமுகவை தவிர்த்து எந்த கூட்டணியும் வெற்றி பெற முடியாது.. பல மாவட்டங்களில் வெற்றியை தீர்மானிக்கும் சக்தியாக இருக்கிறோம்.
செங்கோட்டையன் அரசியல் எதிர்காலம் குறித்து யாரும் அதிகம் கவலைப்பட வேண்டாம்.
53 ஆண்டு அனுபவம் உள்ளவர் , அவரை யாரும் பின்னணியில் இருந்து இயக்க வேண்டிய அவசியமில்லை.
இன்னும் அவர் நல்ல உடல் நலத்தோடு சிட்டுக்குருவி போல சுறுசுறுப்பாக உள்ளார். அவருடைய பங்களிப்பு குறித்து இன்னும் 3 மாதங்களில் தெரிந்து விடும்
2009 தேர்தல் வரைதான் நான் அதிமுகவில் தீவிரமாக இருந்தேன்.
2011 தேர்தலில் ஓபிஎஸ் - வைகோ இடையே நடந்த பேச்சுவார்த்தை குறித்து எனக்கு எதுவும் தெரியாது.
தனது தாத்தாவை போல உதயநிதியும் நகைச்சுவையாக பேசுகிறார் . தவெக தங்களை உறுத்துவதால்தான் அவர் தவெக குறித்து பேசியிருப்பார்.
எஸ்.ஐ. ஆர் நடைமுறையில் விண்ணப்பங்களை பதிவு செய்வது உண்மையாகவே கடினமாக உள்ளது .மத்திய அரசு அதை எளிதாக்க வேண்டும் அல்லது எஸ்.ஐ.ஆர் நடைமுறையை தள்ளிப் போட வேண்டும்.
சீ..சீ இந்த பழமும் புளிக்கும் போல என நினைத்து இப்போது அதிமுகவினர் விஜயை விமர்சிக்க தொடங்கியுள்ளனர்.
பிரசாரக் கூட்டத்தில் தங்கள் கட்சி கரர் கையில் தவெக கொடியை கொடுத்து டியூப்ளிகட் வேலை பார்த்தார் இபிஎஸ். தனது கட்சிக்காரர்களையும் ஏமாற்றும் வகையில் தவெக கூட்டணிக்கு வரப்போகிறது என கூவி கூவி அழைத்தார் எடப்பாடி பழனிசாமி.
திமுகவை விட அதிகமாக இன்னும் சில நாட்களில் தவெக வை அதிமுகதான் தாக்கி பேசப்போகிறது.
இலவச அட்வைஸ் வேஸ்ட் , விஜய்க்கு நான் எந்த அட்வைசும் கொடுக்க விரும்பவில்லை.
தவெக உள்ளிட்ட கட்சிகளிடன் கூட்டணி அமைப்பது குறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை .வரும் தேர்தலில் துரோகத்தை வீழ்த்துவதே எங்கள் நோக்கம்.
எந்த ஆயுதம் என்பது இன்னும் 2, 3 மாதங்களில் தெரியும் என்று கூறினார்.
Hindusthan Samachar / P YUVARAJ