Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 10 நவம்பர் (ஹி.ச.)
கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்த தமிழக, கேரள எல்லையான சாலக்குடி, அதிரப்பள்ளி செல்லும் சாலையில் தினந்தோறும் யானைகள் உலா வருவது வழக்கமாகி உள்ளது.
இந்நிலையில் அப்பகுதியில் வால்பாறையை சுற்றிப் பார்க்க ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து சென்ற போது அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் இருந்து காட்டு யானை ஒன்று சுற்றுலா பயணிகளின் வாகனத்தை தாக்குவது போல் வந்தது.
அப்போது சுதாரித்துக் கொண்ட வாகன ஓட்டி வாகனத்தை லாபகமாக ஒட்டி தப்பித்துக் கொண்டனர். இருப்பினும் வாகனத்தை விரைவாக விரட்டி சென்ற காட்டு யானை பின்னே வந்த வாகனங்கள் மிகவும் அச்சத்தில் ஆழ்ந்தனர்.
மேலும் அப்பகுதியில் சுற்றித் தெரியும் ஒற்றைக் காட்டு யானை, அப்பகுதியில் வந்த அரசு போக்குவரத்துக் கழக பேருந்து தாக்கி நொறுக்கியது. இதனால் பேருந்தில் பயணம் செய்த பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் பீதி அடைந்து அலறல் சத்தம் போட்டனர்.
இதனால் அதிரப்பள்ளி சாலையில் செல்லும் சுற்றுலாப் பயணிகள் வாகனத்தை கவனமாக ஓட்டி செல்ல வேண்டும் என வனத்துறை சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Hindusthan Samachar / ANANDHAN