காவலர் குடியிருப்பில் இளைஞர் படுகொலை - திருச்சியில் பயங்கரம்
திருச்சி, 10 நவம்பர் (ஹி.ச.) திருச்சி மாவட்டம் பீமா நகர் கீழத் தெருவை சேர்ந்த தாமரைச்செல்வன் (வயது 27). இவருக்கு கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு தான் திருமணம் நடைபெற்றது. தனியார் கம்பெனி ஒன்றில் டூவீலர் மெக்கானிக்காக பணியாற்றி வரும் தாமரைச்செ
காவலர் குடியிருப்பில் இளைஞர் படுகொலை - திருச்சியில் பயங்கரம்


திருச்சி, 10 நவம்பர் (ஹி.ச.)

திருச்சி மாவட்டம் பீமா நகர் கீழத் தெருவை சேர்ந்த தாமரைச்செல்வன்

(வயது 27). இவருக்கு கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு தான் திருமணம் நடைபெற்றது.

தனியார் கம்பெனி ஒன்றில் டூவீலர் மெக்கானிக்காக பணியாற்றி வரும் தாமரைச்செல்வன் இன்று (நவ.,10) காலை வேலைக்கு செல்லும்போது, டூவீலரில் 5 பேர் பின்தொடர்ந்து வந்துள்ளனர்.

பீமா நகர் பழைய தபால் நிலைய சாலையில் உள்ள போலீஸ் குடியிருப்பு அருகே வந்தபோது, அவர்கள் தாமரைச்செல்வனை வழிமறித்துள்ளனர். பயத்தில் அங்கிருந்து போலீஸ் குடியிருப்புக்குள் நுழைந்த தாமரைச்செல்வன், காவலர் செல்வராஜ் வீட்டிற்குள் புகுந்துள்ளார்.

விடாமல் துரத்தி வந்த 5 பேரும், வீட்டினுள் சென்று தாமரைச்செல்வனை சரமாரியாக வெட்டி கொன்றனர். அதிர்ச்சியடைந்த எஸ்எஸ்ஐ செல்வராஜ் மற்றும் குடும்பத்தினர் கூச்சலிடவே, கொலையாளிகள், அங்கிருந்து தப்பியோடினர்.

குடியிருப்பில் இருந்த மற்ற போலீஸ்காரர்கள், அவர்களின் குடும்பத்தார் சேர்ந்து ஒருவரை சுற்றி வளைத்து பிடித்தனர். மற்ற நான்கு பேர் தப்பினர்.

இந்த சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் தாமரை செல்வன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

பட்டப்பகலில் பொதுமக்கள் முன்னிலையில் கொலை நடைபெற்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / vidya.b