Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 11 நவம்பர் (ஹி.ச.)
தமிழகத்தில் அக்டோபர் மாதத்திற்கு பிறகு வெயில் மழை என வானிலை நிலவி வருகிறது.
இந்த நிலையில் தென்மேற்கு பருவமழை வலுவிழந்து இருக்கும் நிலையில், வடகிழக்கு பருவ மழையால் அடுத்தடுத்து காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள் உருவாகி வருகிறது.
இன்று முதல் வடகிழக்கு பருவமழை மீண்டும் தமிழகத்தில் கால் எடுத்து வைத்து உள்ளது.
கொங்கு மண்டலத்தில் ஆங்காங்கே மிதமான மழை பெய்ய தொடங்கும் என்றும், இந்த மழை பரவலாக இருக்காது ஆங்காங்கே ஒதுக்கி மிதமானது முதல் சற்று கனத்த மழையாக பதிவாகும் என்றும் அடுத்த இரண்டு வாரங்களுக்கு நடுவில் ஒரு சில நாட்கள் இடைவெளி விட்டு, விட்டு கொங்கு மண்டலத்தில் மழை பெய்யும் என்றும்,
கோவை, மாநகரைப் பொறுத்த வரை ஒரு சில நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது எனவும், கன மழைக்கான வாய்ப்பு நவம்பர் இறுதி வாரத்தில் உள்ளதாகவும், வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்து இருந்தனர்.
இந்நிலையில் கோவை ரயில் நிலையம், டவுன்ஹால், உக்கடம், கருப்புகடை, ராமநாதபுரம், சிங்காநல்லூர் போன்ற பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
இதேபோன்று புறநகர் பகுதிகளான தொண்டாமுத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது.
இந்த மலையின் காரணமாக நிலத்தடி நீர்மட்டம் உயர்வதாலும், குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் கோவையில் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
Hindusthan Samachar / V.srini Vasan