அதிகரிக்கும் பயணிகள் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு திருப்பூர் வழியாக மசூலிப்பட்டினம்-கொல்லம் இடையே சிறப்பு ரெயில் இயக்கம்
திருப்பூர், 11 நவம்பர் (ஹி.ச.) கார்த்திகை மாதம் வருகிற 17-ந் தேதி வர உள்ளது. இந்த மாதத்தில் சபரிமலை செல்வதற்காக அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருப்பர். இதை முன்னிட்டும், அதிகரித்து வரும் பயணிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டும், திருப்பூ
அதிகரிக்கும் பயணிகள் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு திருப்பூர் வழியாக மசூலிப்பட்டினம்-கொல்லம் இடையே சிறப்பு ரெயில் இயக்கம்


திருப்பூர், 11 நவம்பர் (ஹி.ச.)

கார்த்திகை மாதம் வருகிற 17-ந் தேதி வர உள்ளது. இந்த மாதத்தில் சபரிமலை செல்வதற்காக அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருப்பர்.

இதை முன்னிட்டும், அதிகரித்து வரும் பயணிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டும், திருப்பூர் வழியாக ஆந்திரா மாநிலம் மசூலிப்பட்டினம்-நரசாபூர்-கொல்லம் இடையே சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது.

மசூலிப்பட்டினம்-கொல்லம் வாராந்திர சிறப்பு ரெயில் (வண்டி எண்.07101) வருகிற 21, 28, டிசம்பர் மாதம் 26, ஜனவரி மாதம் 2-ந்தேதிகளில் (வெள்ளிக்கிழமைகளில்) மாலை 4.30 மணிக்கு மசூலிப்பட்டினத்தில் இருந்து புறப்பட்டு மறுநாள் இரவு 10 மணிக்கு கொல்லத்தை சென்றடையும்.

கொல்லம்-மசூலிப்பட்டினம் வாராந்திர சிறப்பு ரெயில் (07102) வருகிற 16, 23, 30, டிசம்பர் 28, ஜனவரி 4-ந்தேதிகளில் (ஞாயிற்றுக்கிழமைகளில்) கொல்லத்தில் இருந்து அதிகாலை 2.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 8 மணிக்கு மசூலிப்பட்டினத்தை சென்றடையும்.

நரசாபூர்-கொல்லம் வாராந்திர சிறப்பு ரெயில் (07105) வருகிற 16-ந்தேதி முதல் ஜனவரி 18-ந்தேதி வரை (10 சேவைகள்) ஞாயிற்றுக்கிழமைகளில் நரசாபூரில் இருந்து மதியம் 3 மணிக்கு புறப்பட்டு மறுநாள் இரவு 10 மணிக்கு கொல்லத்தை சென்றடையும்.

கொல்லம்-நரசாபூர் வாராந்திர சிறப்பு ரெயில் (07106) வருகிற 18-ந்தேதி முதல் ஜனவரி 20-ந்தேதி வரை (10 சேவைகள்) செவ்வாய்க்கிழமைகளில் அதிகாலை 2.30 மணிக்கு கொல்லத்தில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 7 மணிக்கு நரசாபூர் சென்றடையும்.

இந்த தகவலை, திருப்பூர் ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Hindusthan Samachar / JANAKI RAM