Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 11 நவம்பர் (ஹி.ச.)
தமிழகத்தில் அடுத்த ஆண்டு (2026) நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு எஸ்.ஐ.ஆர். எனப்படும் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணியை தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது.
இந்த நிலையில் வாக்காளர் பட்டியல் திருத்த பணியை தேர்தல் ஆணையம் கைவிட கோரி தமிழகம் முழுவதும் தி.மு.க. கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
இது குறித்து முதல்வர் ஸ்டாலின் இன்று (நவ 11) எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது,
எஸ்.ஐ.ஆர்-ஐத் தடுப்பதே நம்முன் இப்போதுள்ள ஆகப்பெரும் கடமை!
ஒருபுறம், மக்களாட்சியின் அடிப்படையான வாக்குரிமையையே பறிக்கும் #SIR எனும் ஆபத்துக்கு எதிராகச் சட்டப் போராட்டம் - களப் போராட்டம் -
மறுபுறம், தொடங்கப்பட்டுவிட்ட #SIR பணிகளில் குளறுபடிகளைத் தடுத்திட #WarRoom #Helpline -
களப் போராட்டத்தில், இன்று தமிழ்நாடெங்கும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பதாகைகளை ஏந்தியும் - கண்டன முழக்கங்களை எழுப்பியும் எஸ்.ஐ.ஆர் எனும் பேராபத்துக்கு எதிராகக் கூடியுள்ள மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியினர்!
தொடர்ந்து செயலாற்றுவோம்! நம் மக்களின் வாக்குரிமையைப் பாதுகாப்போம்!
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
Hindusthan Samachar / vidya.b