Enter your Email Address to subscribe to our newsletters


கோவை, 13 நவம்பர் (ஹி.ச.)
கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளான தடாகம், கணுவாய், வரபாளையம், நஞ்சுண்டாபுரம், பன்னீர்மடை ஆகிய பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் அண்மை காலங்களாகவே அதிகரித்து உள்ளது.
வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் விவசாய நிலங்களை சேதப்படுத்தி வருகின்றன அவ்வப்போது வீடுகளிலும் ரேஷன் கடைகளிலும் வைக்கப்பட்டுள்ள அரிசி உள்ளிட்ட பொருட்களையும் தின்று செல்கிறது இதனால் அப்பகுதி விவசாயிகளும் பொதுமக்களும் அச்சமடைந்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று இரவு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய குட்டி யானைகள் உட்பட ஏழுக்கும் மேற்பட்ட காட்டு யானை கூட்டம் தடாகம் அடுத்த வரப்பாளையம் பகுதியில் சுற்றித்திரிந்துள்ளது.
அப்போது அங்குள்ள தனியார் தோட்டத்திற்குள் புகுந்துள்ளன அதில் இரண்டு யானைகள் முட்டி மோதிக் கொண்டுள்ளன.
இந்த சம்பவம் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி யில் பதிவான நிலையில் தற்பொழுது அந்த காட்சிகள் வெளியாகி உள்ளது.
Hindusthan Samachar / V.srini Vasan