Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 13 நவம்பர் (ஹி.ச.)
மாநில சாலை வரி தொடர்பாக தமிழக அரசுடன் நடந்த பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் ஏற்படாததை முன்னிட்டுஆம்னி பேருந்து உரிமையாளர்கள் அடுத்த கட்ட போராட்டம் தொடர்பாக ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கத்தின் கூட்டாக கோவையில் செய்தியாளர்களை சந்தித்து வருகின்றனர்.
தலைவர் திருமூர்த்தி மற்றும் செயலாளர் செந்தில் குமார் செய்தியாளர்களை சந்திப்பில் தெரிவித்ததாவது,
கோவையிலிருந்து அருகில் உள்ள மாநிலங்களுக்கு பேருந்தை இயக்கி வருகிறோம்.
National permit வாங்கி வாகனங்களை இயக்கி வருகிறோம் ஆனால் தற்போது கேரளா ,கர்நாடக ,ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் மாநில சாலை வரி என்று லட்சக்கணக்கில் வசூலிக்கிறார்கள்.
இதனால் வாகனங்களை இயக்க முடியாத சூழல் உள்ளது.
நமது பேருந்து அருகில் உள்ள மாநிலங்களுக்கு சென்றால் பேருந்தை அபாரதம் செலுத்தி சொல்லி வண்டியை நிறுத்த சொல்கிறார்கள்.
இதனால் தொழில் செய்ய முடியாத சூழல் உள்ளது.
இதற்கு தமிழக முதல்வரும்,அமைச்சரும் தீர்வு காண வேண்டும்
அதேபோல் அருகில் உள்ள மாநிலங்களிலிருந்து பேருந்துகள் வந்தாலும் தமிழக அதிகாரிகளும் இதே போல செயல்படுவதால் மற்ற மாநில அதிகாரிகளும் இதே கடுமையை கடைபிடிக்கிறார்கள்
முதலில் தமிழகத்தில் தான் அதிகாரிகள் மாநில சாலை வரியை வசூலிக்க ஆரம்பித்ததால் மற்ற மாநில அதிகாரிகளும் இதையே கடைபிடிக்கிறார்கள்.
All India permit வாங்கியும் இந்த மாநில வரியையும் கட்ட சொல்வதால் மற்ற மாநிலங்கள் இதையை கடைபிடிக்கிறார்கள்.
போக்குவரத்து அமைச்சரிடம் நல்ல பதிலை எதிர்பார்க்கிறோம்.
முதல்வர் இவ்விவகாரத்தில் உடனடியாக தலையீட வேண்டும்.
நீதிமன்றத்திற்க்கு சென்றால் உடனடியாக தீர்வு கிடைக்காது.கடந்த 5 நாட்களாக பக்கத்து மாநிலங்களுக்கு பேருந்தை இயக்க முடியாத நிலை உள்ளது.
இந்த தொழிலை நம்பி பல தொழிலாளர்கள் இருக்கிறார்கள்.அதேபோல் ஆம்னி பேருந்துகளுக்கு பண்டிகை காலங்களில் ஒரு நிலையான கட்டணத்தை நிர்ணயிக்க கூறியும் இதுவரை நிர்ணயிக்கவில்லை.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Hindusthan Samachar / V.srini Vasan