உடன்பிறப்பே வா நிகழ்வில் இன்று போடி, சாத்தூர் தொகுதி திமுக நிர்வாகிகளுடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு
சென்னை, 13 நவம்பர் (ஹி.ச.) சென்னை, அண்ணா அறிவாலயத்தில், ''உடன்பிறப்பே வா'' என்ற தலைப்பில் சட்டமன்றத் தொகுதி வாரியாக பகுதி-நகர-ஒன்றிய-பேரூர் கழகச் செயலாளர்கள் ஒவ்வொருவரையும் தனித்தனியாக திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின்
உடன்பிறப்பே வா நிகழ்வில் இன்று போடி, சாத்தூர் தொகுதி திமுக நிர்வாகிகளுடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு


சென்னை, 13 நவம்பர் (ஹி.ச.)

சென்னை, அண்ணா அறிவாலயத்தில், 'உடன்பிறப்பே வா' என்ற தலைப்பில் சட்டமன்றத் தொகுதி வாரியாக பகுதி-நகர-ஒன்றிய-பேரூர் கழகச் செயலாளர்கள் ஒவ்வொருவரையும் தனித்தனியாக திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் சந்திக்கும் 'ஒன் டு ஒன்' நிகழ்வு கடந்த ஜூன் மாதம் 13 ஆம் தேதி அன்று தொடங்கப்பட்டது.

மக்களின் கோரிக்கைகளைக் கேட்பது போல, திமுகவினரின் மனக்குரலை அறிந்துகொள்வதற்காகத்தான் ‘உடன்பிறப்பே வா’ எனும் தொகுதிவாரியான நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டம் நடைபெற்று வருகின்றது.

அதன்படி, சென்னை அண்ணா அறிவாலயத்தில் 'உடன் பிறப்பே வா' நிகழ்ச்சியில் இன்று (நவ 13) போடிநாயக்கனூர், சாத்தூர் சட்டமன்ற தொகுதி நிர்வாகிகளை முதல்வர் ஸ்டாலின் சந்தித்து ஆலோசனை நடத்தினார். ஆலோசனையின்போது தொகுதி நிலவரம், வெற்றி வாய்ப்பு, தேர்தல் பணி உள்ளிட்டவை குறித்து அவர்களிடம் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார்.

அப்போது, கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெறாதவர்களில் தகுதியானவர்கள் இருப்பின் அவர்கள் உரிமைத்தொகை பெறும் வகையில் கட்சியினர் உதவிட வேண்டும் என்று கட்சியினரிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்கியுள்ளார்.

போடி தொகுதியை இம்முறை திமுக கூட்டணி வெல்ல வேண்டும்- தொகுதி நிர்வாகிகளிடம் முதலமைச்சர் கண்டிப்புடன் கூறியுள்ளார்.

மேலும், அரசின் சாதனைகளை தொகுதி முழுக்கவும் விளம்பரப்படுத்தவும் நிர்வாகிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார்

Hindusthan Samachar / vidya.b