Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 13 நவம்பர் (ஹி.ச.)
டெல்லி கார் வெடிகுண்டு தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து டில்லியில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. பல்வேறு இடங்களில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த நிலையில், இண்டிகோ விமான நிறுவனத்தின் குறைகேட்பு பக்கத்தில், டில்லி விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பொதுமக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது.
இது குறித்து டில்லி போலீசார் கூறுகையில்,
நேற்று மாலை 4 மணியளவில் தீயணைப்பு வீரர்களுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில், டில்லி விமான நிலையத்தின் 3வது முனையத்தில் வெடிகுண்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, சம்பவ இடத்திற்கு நேரில் சென்று தீவிர சோதனை நடத்தப்பட்டது. அதன்பிறகு தான் அது புரளி என தெரியவந்தது. இதேபோல, பிற பகுதியில் உள்ள விமான நிலையங்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது. அங்கும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. என்று கூறினர்.
இதனிடையே டெல்லி மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
பாதுகாப்பு காரணங்களுக்காக டெல்லி லால் கிலா மெட்ரோ ரயில் நிலையம் மறுஅறிவிப்பு வரும் வரை செயல்படாது. ஆனால், மற்ற மெட்ரோ நிலையங்கள் வழக்கம்போல செயல்படும். மேற்கொண்டு தகவல்கள் அடுத்தடுத்து அறிவிக்கப்படும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b