Enter your Email Address to subscribe to our newsletters


கோவை, 13 நவம்பர் (ஹி.ச.)
கோவையில் தென்னிந்திய இயற்கை விவசாயிகள் மாநாட்டில் கலந்து கொண்டு பிரதமர் உரையாற்ற உள்ளார்.
இது தொடர்பாக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை இன்று கோவையில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.
அப்போது பேசியஅவர்,
ஒவ்வொரு மாவட்டத்துக்கும் விவசாயத்துக்கான ஒரு அதிகாரி இருப்பார்.
ஆனால் அவர் தங்கள் பொறுப்பை சரியாக நிறைவேற்றுவதில்லை. தமிழக அரசு விவசாயத்திற்கு உரிய முன்னுரிமை அளிப்பதில்லை.
பிரதமர் நரேந்திர மோடி வரும் 19ஆம் தேதி கோவை வருகிறார். தென்னிந்திய இயற்கை விவசாய மாநாட்டில் கலந்து கொண்டு 50க்கும் மேற்பட்ட விவசாய விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடுகிறார். பிரதமர் விவசாயத்திற்காக பிரத்யேகமாக நேரத்தை ஒதுக்கி வருவது குறிப்பிடத்தக்கது,என்றார்.
மேலும் “நாட்டுக்குள் தீவிரவாதம் உற்பத்தியாகக் கூடாது. அது எந்த மதத்துடனும் சம்பந்தப்படாத ஒன்று. அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து தீவிரவாதத்தை ஒழிக்க வேண்டும். தமிழகத்தில் முதலமைச்சர் தனிப்பட்ட கவனம் செலுத்த வேண்டும், ஏனெனில் மாநிலத்தில் பொருளாதார வளர்ச்சி அதிகம் உள்ளது.
சரியான அதிகாரிகளை கண்காணிப்பில் வைத்திருக்க வேண்டும். மதத்தின் பெயரில் தீவிரவாதம் நடக்கக் கூடாது; மதத் தலைவர்கள் அதைப் பற்றி திறந்தவெளியில் பேச வேண்டும், ஒன்றிணைந்து சமூக ஒற்றுமையை பேண வேண்டும், என்றார்.
சமூக விரோதச் செயல்கள் அதிகரித்து வருகின்றன. குற்றங்கள் பெருகி வருகின்றன. திமுக அரசு காவல்துறையை சரியாகக் கையாளவில்லை. காவல்துறை கோட்டை விட்டுள்ளது. கோவை கல்லூரி மாணவி சம்பவத்தையும் இதன் ஒரு எடுத்துக்காட்டாக பார்க்கலாம். முதலமைச்சர் காவல்துறையை இன்னும் சிறப்பாக கையாள வேண்டும், என்றார்.
கர்நாடக மாநிலத்தில் அவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறார் என்ற கேள்விக்கு, “நான் தொழில் முறையாகச் செய்கிறேன். எந்த தொழிலையும் செய்ய எனக்கு உரிமை உள்ளது. நியாயமான வழியில் சம்பாதித்து அரசியல் செய்கிறேன்.
நான் இளைஞர்களிடம் சொல்லுவது – ஆரோக்கியமாக சம்பாதியுங்கள் என்பதே. நான் சாராய ஆலை நடத்தவில்லை. முதலமைச்சர் என்ன தொழில் செய்கிறார் என்பதை அவரே சொல்லட்டும். டி.ஆர். பாலு வந்த கார் ஒரு சாராய ஆலையின் பெயரில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. எனக்கு தொழில் துவங்க 5 லட்சம் முதலீட்டுப் பணம் போதும், என்றார்.
பீகார் தேர்தலைப் பற்றி அவர் கூறியதாவது: “பிரசாந்த் கிஷோர் முக்கிய நபர் தான். ஆனால் என்.டி.ஏ கூட்டணி கண்டிப்பாக வெற்றி பெறும். வாக்காளர் பட்டியலில் குழப்பம் இருப்பதை மறுக்க முடியாது. அதிகாரிகள் அதை சரி செய்ய வேண்டும். யாருக்கும் பயம் தேவையில்லை.
அது BLO வின் பொறுப்பு. தமிழகத்தில் 5 கோடிக்கும் மேல் பூர்த்தி செய்யப்பட்ட பார்ம்கள் தேர்தல் ஆணையத்திடம் வந்துள்ளதாகத் தகவல் உள்ளது, என்றார்.
தமிழ்நாடு விளையாட்டில் சிறந்த மாநிலம். ‘அயன்மேன்’ போட்டியை தமிழகத்திலும் நடத்த வேண்டும். முழுமையான அயன்மேனாக மாறுவது எனது இலக்கு.
இன்னும் தேர்தல் சூடு பிடிக்கவில்லை. டிசம்பர், ஜனவரியில் கூட்டணி விவரம் தெரியும். அரசியல் ஆட்டத்தில் இறுதிப் போட்டியில் வெற்றி பெறுவதே நோக்கம்.
டி.ஆர். பாலு நீதிமன்றத்தில் ஆஜராகாததைப் பற்றி அவர், “அவர் உடல்நிலை சரியில்லாதவர் போல தெரியவில்லை. அடுத்தமுறை நீதிபதியிடம் சொல்வேன் — டி.ஆர். பாலு உங்களை ஏமாற்றிவிட்டார் என்று.
விவசாய நிலங்களில் எரிவாயு குழாய் பதிப்பால் ஏற்படும் பாதிப்புகளில் விவசாயிகளின் பக்கம் எப்போதும் பாஜக நிற்கும் எனவும், மத்திய அரசின் விவசாயத் திட்டங்களில் தமிழகத்தின் பங்கு குறைந்துவிட்டதை மாநில அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் அண்ணாமலை வலியுறுத்தினார்.
Hindusthan Samachar / V.srini Vasan