Enter your Email Address to subscribe to our newsletters

திருப்பத்தூர், 13 நவம்பர் (ஹி.ச.)
திருப்பத்தூர் மாவட்டத்தை அடுத்துள்ள அச்சமங்கலம் பகுதியைச் சேர்ந்த சங்கர் மகன் பாக்கியராஜ் (42). இவர் வெல்டிங் வேலை செய்து வரும் நிலையில் திருமணமாகி இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளன.
இந்நிலையில் ஜோலார்பேட்டை அருகே உள்ள அரசு பள்ளியில் 6-ம் வகுப்பு படிக்கும் சிறுமிடம் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். அதுமட்டுமல்லாமல் இதனை யாரிடமாவது சொன்னால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டல் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக மிரட்டலையும் மீறி பெற்றோரிடம் சிறுமி நடந்த சம்பவத்தை கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து இந்த புகாரின் பேரில் பாக்கியராஜை காவல் நிலையம் அழைத்து வந்தனர்.
இதனையடுத்து திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சியாமளாதேவி அந்த சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டார். பின்னர் பாக்யராஜ் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு கைது செய்தனர்.
பின்னர் திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
42 வயதான காமக்கொடூரன் 6ம் வகுப்பு படிக்கும் பள்ளி சிறுமியிடம் அத்துமீறிலில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN