கருப்பு சிவப்பு புத்தகம் வாங்கி விஜய்க்கு அந்த புத்தகத்தை கொடுங்கள், நன்றாக படிக்கட்டும் - கரு.பழனியப்பன்
சென்னை, 13 நவம்பர் (ஹி.ச) வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்றுவரும் திமுக 75 அறிவுத் திருவிழா மற்றும் முற்போக்கு புத்தக கண்காட்சியில் தினமும் கருத்தரங்கம் நடைபெற்று வருகிறது. இன்றைய கருத்தரங்கில் இயக்குநர் கரு.பழனியப்பன் உரையாற்றினார். இந்த நிகழ்வில் க
Karu


சென்னை, 13 நவம்பர் (ஹி.ச)

வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்றுவரும் திமுக 75 அறிவுத் திருவிழா மற்றும் முற்போக்கு புத்தக கண்காட்சியில் தினமும் கருத்தரங்கம் நடைபெற்று வருகிறது. இன்றைய கருத்தரங்கில் இயக்குநர் கரு.பழனியப்பன் உரையாற்றினார்.

இந்த நிகழ்வில் கரு.பழனியப்பன் பேசியபோது,

தமிழகத்தில் பல புதிய அரசியல் கட்சிகள் வரவேண்டும். புதிதாக வரும் அனைத்து கட்சிகளும் திமுக தான் எதிரியாக இருக்கிறது.

திமுகவை ஒழிப்பதற்காக தான் அத்தனை கட்சிகளும் உருப்பெறுகிறது. அப்படி உருவாகும் கட்சிகள் அனைத்தும் உருத்தெரியாமல் போய், திமுக மட்டும் தொடர்ந்து நினைத்திருப்பதற்கு காரணம் அந்த கட்சிக்கு இருக்கும் பலமான அடித்தளம்.

திமுக ஆரம்பிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் சட்டதிட்டங்களை வகுக்க குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழுவின் அறிக்கையை விவாதித்து கட்சிக்கான சட்டத்திட்டங்கள் வகுக்கப்பட்டது. மற்ற எந்த கட்சிகளிடமும் சட்டதிட்டங்கள் இருப்பதில்லை.

திமுக இந்த நாட்டு மக்களின் நலன் பற்றி பேசுவது மட்டுமல்லாமல், அறிவைப் பற்றியும் பேசுகிறது.

இங்கு வந்திருக்கும் நபர்கள் இரண்டு புத்தகங்களைகருப்பு சிவப்பு புத்தகம் வாங்கியிருந்தால் விஜய் வீட்டுக்கு அருகில் இருந்தால் அவருக்கு அந்த புத்தகத்தை கொடுங்கள்.

விஜய்யின் இன்றைய அறிக்கையில், எண் பேராயம் ஐம்பெருங்குழுக்கள் என்கிற வார்த்தை எல்லாம் ஆச்சரியமாக உள்ளது, மிகப்பெரிய இலக்கியவாதி தான் அவருக்கு எழுதி கொடுத்துள்ளார். எனக்கு எழுத்தாளர் ஜெயமோகன் மீது தான் சந்தேகம் உள்ளது.

இந்த இரண்டு வார்த்தைகளுக்கும் விஜய் பதில் சொல்லட்டும்.

குறுகிய நேரத்தில் நடத்தி முடிப்பதற்கு பெயர் மாநாடு கிடையாது. மாநாட்டிற்கு அனைவரும் வரவேண்டும் அனைவரும் பேச வேண்டும்.

விஜய் மட்டுமல்ல நிறைய புதிய கட்சிகள் வரவேண்டும்.விஜயின் அருகில் எப்போதும் மனிதர்கள் இருக்க மாட்டார்கள், அவருக்கு மனித வாடையே ஆகாது. இப்போதுதான் விஜயின் அருகில் மனிதர்கள் உட்கார்கிறார்கள்.

எல்லா இடங்களிலும் எங்களைப் பற்றி தான் பேசுகிறீர்கள் என்று சொல்கிறார், யார் வரவில்லையோ? யாருக்குப் புரியவில்லையோ? அவர்களை பற்றி தானே பேச வேண்டும். மக்குகளை பொறுத்துக் கொள்வதுதான் கஷ்டத்திலும் கஷ்டம் என்று வள்ளுவர் கூறுகிறார்.

தமிழ்நாட்டின் ஸ்டாலின் போல் நான் இருக்க வேண்டும் என்று பீகாரில் தேஜாஸ்வி யாதவ் கூறுகிறார். தமிழ்நாட்டில் முதலமைச்சரும் அமைச்சரும் வெளிநாடுகளுக்குச் சென்று முதலீடுகளை கொண்டுவர வருவதைப் போல முதல்வர்கள் செயல்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் அறிவுத் திருவிழா உதயநிதியின் பிறந்தநாளில் தொடங்கி அம்பேத்கர் நினைவுநாளில் நிறைவுவிழா நடைபெறும் வகையில் நடத்தப்பட வேண்டும்.இவ்வாறு பேசினார்.

Hindusthan Samachar / P YUVARAJ