Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 13 நவம்பர் (ஹி.ச.)
முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் இன்று
(நவ 13) தலைமைச் செயலகத்தில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் நடைபெற்றது.
இந் நிகழ்வில், திருவாரூர் மாவட்டத்தில் 50 கோடி ரூபாய் முதலீட்டில் 2500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், SCM Garments பிரைவேட் லிமிடெட் நிறுவனம் (தி சென்னை சில்க்ஸ் குழுமம்) ஆடை உற்பத்தி அலகு அமைக்கும் திட்டத்திற்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
SCM Garments குழுமத்தின் துணை நிறுவனமான SCM Garments பிரைவேட் லிமிடெட்
நிறுவனம், 50 கோடி ரூபாய் முதலீட்டில் 2500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், திருவாரூர் மாவட்டத்தில் ஆடை உற்பத்தி அலகு அமைத்திட திட்டமிட்டுள்ளது.
முதலமைச்சர் முன்னிலையில் இன்றையதினம், இத்திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
இந் நிகழ்வின்போது, அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, தலைமைச் செயலாளர், நா. முருகானந்தம், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை செயலாளர் வி. அருண் ராய், வழிகாட்டி நிறுவனத்தின் செயல் இயக்குநர் பு. அலர்மேல்மங்கை, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத் தலைவர் கே.எம். சுப்ரமணியன், SCM Garments நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் பி.பி.கே. பரமசிவம், செயல் இயக்குநர் கௌசிக் குமரன், திட்ட மேலாளர் ஸ்ரீநிவாசன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.
Hindusthan Samachar / vidya.b