Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 13 நவம்பர் (ஹி.ச.)
சென்னை திரு வி க நகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் சி எம் டி ஏ, அறநிலையத்துறை மற்றும் சென்னை மாநகராட்சி சார்பில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி பணிகளை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார்.
இந் நிகழ்வில் மேயர் பிரியா மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் உடன் இருந்தனர்.
மேயர் பிரியா செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது,
ஏழை எளிய மாணவர்கள் பயன்பெறும் வகையில் முதல்வர் படைப்பகம் பல்வேறு இடங்களில் திறக்கப்பட்டு வருகிறது. இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் கல்விக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.
மழைக்காலங்களில் அதிக மழையின் காரணமாக சில சாலைகள் குண்டும் குழியுமாகும் சூழல் ஏற்படுகிறது.
சீர் செய்யும் பணிகள் மாநகராட்சி சார்பில் செய்யப்பட்டு வருகிறது. டெங்கு தொடர்பாக வீடு வீடாக சென்று மாநகராட்சி சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. ப்ளீச்சிங் பவுடரும் பல்வேறு இடங்களில் வழங்கப்பட்டு வருகிறது.
என்றார்.
அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது,
நயினாரின் பதவி காலம் எண்ணப்பட்டு வருகிறது என்று அமைச்சர் சேகர்பாபு நயினாரை பற்றி பேசி இருந்தார்.
அதற்கு நயினார் நான் இன்னும் இரண்டரை ஆண்டுகள் இருப்பேன் சேகர்பாபுக்கு இரண்டரை மாதம்தான் இருக்கிறது என்று பேசி இருந்தார்
நயினார் பேசியது குறித்த கேள்விக்கு?
இரண்டரை ஆண்டுகளா? அல்லது இரண்டு மாதங்களா? என்பது டெல்லியில் இருக்கும் ஓனர்தன் முடிவு செய்ய வேண்டும். நயினார் அல்ல.பாஜக மாநில தலைவர் பதவி இசை நாற்காலி போன்றது
எப்படி நாடாளுமன்ற தேர்தலுக்குப் பிறகு அண்ணாமலைக்கு அரோகரா போட்டார்கள்.
அதேபோல 2026 சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு ஏற்படும் படுதோல்வியால் நயினார் என்கின்ற நைனாவையும் பேக் செய்ய டெல்லி தயாராகும்.
தொலைபேசியில் அழைத்து நயினார் பேசுகிறேன் என்று சொன்னால் கூட நைனாவா என்று கேட்கிறார்கள் என்று அவரே விரும்பி பேசி இருக்கிறார்.
அந்தக் கட்சிக்காரர்களுக்கு நயினாரை பற்றிய புரிதல் இல்லாத பொழுது எப்படி தமிழ்நாட்டை திமுகவிடமிருந்து மீட்டெடுக்க போகிறார் என்பதை தெரியவில்லை நிச்சயமாக நயினாரின் நாற்காலி 2026 சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு உறுதியாக காலியாகும் என்று அவர் தெரிவித்தார்.
Hindusthan Samachar / P YUVARAJ